சர்வோதயா பள்ளிகளில் நர்சரி வகுப்புகள் தொடங்க முடிவு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, January 23, 2017

சர்வோதயா பள்ளிகளில் நர்சரி வகுப்புகள் தொடங்க முடிவு

கல்வி இயக்குனரகத்தின் கீழ் 447 சர்வோதயா பள்ளிகள் செயல்படுகின்றன. இவற்றில் 404 பள்ளிகளில் பிரி-பிரைமரி வகுப்புகள்
(கேஜி என்கிற கிண்டர் கார்டன்) நடத்தப்படுகின்றன. இந்த கேஜி பள்ளிகளில் நர்சரி வகுப்புகள் தொடங்கவும், கேஜி வகுப்புகள் இல்லாத பள்ளிகளில் பிரி-பிரைமரி வகுப்புகள் தொடங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான நடைமுறைகளை தொடங்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக கல்வி இயக்குனரகத்தின் இயக்குனர் சவுமியா குப்தா தெரிவித்துள்ளார். குறிப்பாக, இந்த வகுப்புகள் இல்லாத பள்ளிகளில் புதிய வகுப்புகளை தொடங்கவும், இதுபோன்ற புதிய வகுப்புகளை வேண்டாம் என தெரிவிக்கும் பள்ளிகள் அதறகான உரிய காரணங்களை விளக்கமாக தெரிவிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது எனவும் கூறினார்.
மேலும், தேவையின் அடிப்படையில் அடையாளம் காணப்படும் பள்ளிகளுக்கு சீரமைப்பு, மறுகட்டுமானம், பிரிபிரைமரி, நர்சரி பள்ளி வகுப்புகளை மேம்படுத்துதல் உள்ளிட்டவற்றிற்கு தேவையான உதவிகள் செய்யப்படும். இதுதவிர, பிரி-பிரைமரி பள்ளிகளுக்கு தற்போது வழங்கப்பட்ட வரும் ₹1 லட்சம் நிதியுதவிக்கு மாற்றாக, உண்மையாகவே தேவைப்படும் நிதியின் அளவு என்பது ஆய்வுக்கு அதிகரித்து பின் வழங்க திட்டக்கமிஷனகு–்கு தெரிவிக்கப்படும். நர்சரி மற்றும் கேஜி வகுப்புகளுக்கான ஆசிரியர்களின் பணியை முழுமையாக பயன்படுத்திக்கொள்ளப்படும். இதுபோன்ற பள்ளிகளின் செயல்பாடுகள் குறித்து கண்காணிக்க உரிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டு அவர்களுக்கான பணிகள் பற்றியும் பொறுப்புகள் குறுித்தும் விளக்கப்படும் எனவும் சவுமியா தெரிவித்தார்

No comments:

Post a Comment