வானிலை முன்னறிவிப்பு: கடலோர மாவட்டங்களில் மழை வாய்ப்பு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Friday, January 27, 2017

வானிலை முன்னறிவிப்பு: கடலோர மாவட்டங்களில் மழை வாய்ப்பு

தென் மேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுவதால் தமிழக கடலோர மாவட்டங்களில் அனேக இடங்களில் லேசான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

''தென்மேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுவதால் இன்று தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் அனேக இடங்களில் லேசான மழை பெய்யும். ஆங்காங்கே கனமழை பெய்யவும் வாய்ப்புள்ளது.

தமிழக உள்மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மழை பெய்யும். சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும். கடந்த 24 மணி நேரத்தில் திருவாரூர், நாகையில் தலா 20 மில்லி மீட்டரும், நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் 10 மில்லி மீட்டரும் மழை பதிவாகியுள்ளது'' என்றார் பாலச்சந்திரன்.

No comments:

Post a Comment