நீட்' குறித்த வதந்தி :மாணவர்கள் குழப்பம் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, January 23, 2017

நீட்' குறித்த வதந்தி :மாணவர்கள் குழப்பம்

எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., மருத்துவப் படிப்புகளுக்கான, 'நீட்' தேர்வு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாத நிலையில், வதந்திகள் பரவுவதால், மாணவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.

எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., மருத்துவப் படிப்புகளில் சேர, 'நீட்' தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என, உச்ச நீதிமன்றம் கடந்தாண்டு அறிவித்தது. தமிழகம் உட்பட, சில மாநிலங்களில் மட்டும், மாநில அரசின் ஒதுக்கீட்டு இடங்களுக்கு, கடந்த ஆண்டு, 'நீட்' தேர்விலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது. ஆனால், தனியார் கல்லுாரிகள், பல்கலைகளில், 'நீட்' தேர்வின்படியே, மாணவர்கள் சேர்க்கப்பட்டனர்.

இந்த ஆண்டு, 'நீட்' தேர்வில் இருந்து விலக்கு உண்டா என்பது பற்றி, இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகவில்லை. எனவே, மருத்துவப் படிப்பில் சேர உள்ள மாணவர்கள், 'நீட்' தேர்வில் தேர்ச்சி பெற வேண்டிய நிலையில் உள்ளனர்.

அதே நேரம், 'நீட்' தேர்வு தேதியும், விண்ணப்ப பதிவுக்கான தேதியும், இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஆனால், 'நீட்' தேர்வு குறித்து, பல்வேறு தகவல்கள் வதந்தியாக பரவுகின்றன. இது, மாணவர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. 'அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாத நிலையில், தவறான தகவல்களை நம்ப வேண்டாம்' என, சி.பி.எஸ்.இ., அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment