வங்கிகளில் பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடு: பிப்ரவரி இறுதியில் முற்றிலும் நீங்கும் - வங்கி மூத்த அதிகாரி தகவல் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Saturday, January 28, 2017

வங்கிகளில் பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடு: பிப்ரவரி இறுதியில் முற்றிலும் நீங்கும் - வங்கி மூத்த அதிகாரி தகவல்

பண மதிப்பு நீக்க நடவடிக்கை யைத் தொடர்ந்து வங்கிகளில் பணம் எடுப்பதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. சேமிப்புக்
கணக்கு மற்றும் நடப்புக் கணக்கி லிருந்து பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடுகள் இன்னமும் தொடர் கின்றன.
தற்போது பணப் புழக்கம் குறை வாக இருப்பதால் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும், இந்தக் கட்டுப்பாடுகள் பிப்ரவரி மாத இறுதி யில் முற்றிலுமாக நீக்கிவிடும் என்று வங்கி அதிகாரி தெரிவித்தார்.
ஏடிஎம்களில் பணம் எடுப் பதற்கான அளவு ரூ. 10 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. இருப்பினும் வாராந்திர அளவு ரூ. 24 ஆயிரம் என்ற நிலையில் எவ்வித மாற்ற மும் செய்யப்டபவில்லை.
நடப்புக் கணக்கு வைத்திருப் பவர்களுக்கு வாரத்துக்கு ரூ.1 லட்சம் வரை எடுக்க அனுமதிக்கப் பட்டுள்ளது.
இந்த கட்டுப்பாடுகள் அனைத் தும் பிப்ரவரி இறுதியிலோ அல்லது மார்ச் முதல் வாரத்திலோ முற்றிலு மாக ரிசர்வ் வங்கி தளர்த்திவிடும் என்று நம்புவதாக பாங்க் ஆப் மகா ராஷ்டிராவின் செயல் இயக்குநர் ஆர்.கே. குப்தா தெரிவித்தார்.
இது முழுக்க முழுக்க ரிசர்வ் வங்கி எடுக்கும் முடிவின் அடிப் படையிலானது. இப்போதுள்ள நிலைமை மற்றும் அடுத்து வரும் மாற்றங்களை பரிசீலித்து உரிய முடிவை ஆர்பிஐ எடுக்கும் என நம்புவதாக குப்தா தெரிவித்தார்.
பிப்ரவரி மாத இறுதிக்குள் 78% முதல் 88% பணம் புழக்கத்துக்கு வந்துவிடும் என எஸ்பிஐ நடத்திய கணிப்பில் தெரிய வந்துள்ளது. அடுத்த இரண்டு மாதங்களில் நிலைமை சீரடைந்து விடும் என்று கணித்துள்ளது.
இதுகுறித்து மற்றொரு பொதுத் துறை வங்கியின் உயர் அதிகாரி கருத்து தெரிவிக்கும்போது இன் னும் ஓரிரு வாரங்களில் நிலைமை சீரடையும் என்று தெரிவித்துள்ளார்.
நடப்பு நிதி ஆண்டின் இறுதிக் குள்ளாக நிலைமை முற்றிலுமாக சீரடைந்துவிடும் என்றும் ரிசர்வ் வங்கி படிப்படியாக பணம் எடுக்கும் வரம்பை உயர்த்தும் என எதிர்பார்ப்பதாக மற்றொரு வங்கி அதிகாரி தெரிவித்தார்.
வங்கிகளின் ஏடிஎம்களில் வாரம் ரூ. 2,500 எடுக்க முடியும் என்றிருந்த வரம்பை ஜனவரி 1 முதல் ரூ. 4,500 ஆக உயர்த்தியது. பண மதிப்பு நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்ட பிறகு 50 நாளில் இது மேற்கொள்ளப்பட்டது.
இதனிடையே நாடாளுமன்றத் தின் நிதித்துறைக்கான நிலைக்குழு வின் முன் பதிலளித்த ஆர்பிஐ கவர்னர் உர்ஜித் படேல், எவ்வளவு காலத்தில் நிலைமை சீரடையும் என்ற தகவலை உறுதிபட தெரி விக்கவில்லை. ஆனாலும் பண மதிப்பு நீக்கம் செய்யப்பட்ட தொகையில் 60% அல்லது ரூ.9.2 லட்சம் கோடி தொகை புழக்கத் துக்கு விடப்பட்டுள்ளதாக தெரிவித் துள்ளார்.
கடந்த ஆண்டு நவம்பர் 8-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி திடீரென பண மதிப்பு நீக்க நட வடிக்கையை அறிவித்தார். இதன் படி பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அன்றைய தினம் அறிவிக்கப் பட்டது.
இதையடுத்து வங்கிகளில் சேமிப்புக் கணக்கில் பணம் எடுப் பதற்கான கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி விதித்தது. ஏடிஎம்களில் புதிய பணத்தை விநியோகிக்க முடி யாத சூழல் உருவானது. இதனால் ஏடிஎம்களில் மக்கள் நீண்ட நேரம் காத்திருக்க நேர்ந்தது.
இது தவிர மக்கள் தங்கள் கை வசம் இருந்த பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்று வதற்காக வங்கிகளில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியதா யிற்று. பழைய நோட்டுகளை மாற்றுவதற்கு டிசம்பர் 30 வரை கால அவகாசம் வழங்கப்பட்டது

No comments:

Post a Comment