அடுத்த 3 நாட்களுக்கு தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட 12 மாநிலங்களில் கனமழை கொட்டி தீர்க்கும் என மத்திய அரசு எச்சரித்துள்ளது.
இந்திய வானிலை மையம் அளித்துள்ள அறிக்கையின்படி, மத்திய அரசு வெளியிட்டுள்ள எச்சரிக்கையில்,
அடுத்த 3 நாட்களுக்கு மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத், கோவா, பீகார், கர்நாடகா, ராஜஸ்தான், சட்டீஸ்கர், தெலுங்கானா, ஆந்திரா, தமிழகம், கேரளா, டாமன் மற்றும் டயூ ஆகிய மாநிலங்களில் கனமழை பெய்யும்.
இதனால் 14 முக்கிய நதிகளில் நீரின் அளவு வெகுவாக அதிகரிக்கும். சில இடங்களில் வெள்ளப் பெருக்கும் ஏற்படலாம்.
இந்த 12 மாநிலங்களில் மகாராஜ்டிரா,குஜராத்தில் ஏற்கனவே கனமழை, வெள்ளம் ஏற்பட்டுள்ளது. பீகார், அசாம், உ.பி., ஒடிசா மாநிலங்கள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
ஆறுகளில் நீரின் அளவு அதிகரிக்க வாய்ப்புள்ளதால் ஏரி, குளங்கள் மற்றும் ஆற்றங்கரைகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
காவிரி, கிருஷ்ணா உள்ளிட்ட நதிகளில் நீரின் அளவு அதிகரிக்கும். தமிழகத்தில் பவானி, மோயாறு ஆகியவை இந்த கனமழையால் அதிக பாதிப்பை சந்திக்கும். பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாது என்பதால் உடனடி வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படவில்லை.
No comments:
Post a Comment