ஒரிஜினல் லைசென்ஸ் தொலைந்தால் புதுசுக்கு போலீஸ் உடனடி ஏற்பாடு !! - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, August 31, 2017

ஒரிஜினல் லைசென்ஸ் தொலைந்தால் புதுசுக்கு போலீஸ் உடனடி ஏற்பாடு !!

ஒரிஜினல் லைசென்ஸ் தொலைந்தால் புதுசுக்கு போலீஸ் உடனடி ஏற்பாடு !!

வாகன ஓட்டிகளின், 'ஒரிஜினல் லைசென்ஸ்' உள்ளிட்ட ஆவணங்கள் தொலைந்து போனால், இணையதளம் வாயிலாக, மாற்று ஆவணம் பெறும் நடைமுறையை, போலீசார் எளிமைப்படுத்தி உள்ளனர்.

*இது குறித்து, போலீஸ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:


சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள், குற்றம் சாட்டப்பட்டவர்கள், வழக்கு ஆவணம் மற்றும் தொலைந்து போன ஆவணங்கள் குறித்து புகார் அளிக்கவும், தொலைந்து போன ஆவணங் களின் நகல் பெறவும், http:/eservices.tnpolice.gov.in என்ற போலீஸ் இணையதளத்தில், இரண்டு புதிய வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

சாலை விபத்துக்களில் பாதிக்கப்பட்டவர், இழப்பீடு தொகையை பெறவும், சாலை விபத் தில் இறந்தவர்களின் சட்ட பிரதிநிதிகளும், இந்த வசதியின் வாயிலாக, விரைவாக ஆவணங்களை பெறலாம். புலன் விசாரணை யின்போது, போலீசில் பதிவு செய்யப்பட்ட மொபைல் போன் எண் அடிப்படையில், ஆவணங்கள் கோருவோருக்கு அனுமதி வழங்கப்படும்.

'நெட் பாங்கிங்' வசதியை பயன்படுத்த, ஒரு ஆவணத்திற்கு, 10 ரூபாய் செலுத்த வேண்டும்.
கூடுதலாக கோரப்படும் ஆவண நகல்கள், இ - மெயிலில் அனுப்பி வைக்கப்படும். அரசு இ - சேவை மையத்துடன், இந்த சேவையை ஒருங்கிணைக்கும் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

இதனால், பாஸ்போர்ட், வாகன பதிவு சான்றிதழ், ஒரிஜினல் டிரைவிங் லைசென்ஸ் போன்ற ஆவணங்கள் தொலைந்து போனது குறித்து, போலீ சில் புகார் அளிக்கும்நடைமுறையும், மாற்று ஆவணம் பெறுவதும் எளிமையாக்கப்பட்டு உள்ளது. மாற்று ஆவணங்கள் கோருவோரின் மொபைல் எண்ணுக்கு அனுப்பப்படும்,

ஓ.டி.பி., எனப்படும் ரகசிய எண்கள் அடிப்படையில், இதன் உண்மைத் தன்மை உறுதி செய்யப்படும்.பின், தேவையான தகவல்கள் சமர்ப்பிக்கப்பட்டவுடன், தொலைந்த ஆவண நகல், ஒரு தனித்துவமான குறிப்பு எண்ணுடன், உடனடியாக பயனாளிக்கு அளிக்கப்படும். அதே சமயத்தில், இந்த நகல், அவரின் இ - மெயிலுக்கும் அனுப்பப்படும்.

ஆவணம் வழங்கும் அதிகாரிகள், உண்மை தன்மை யை சரிபார்க்க,இணையதளத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதை பயன்படுத்தி, ஓட்டுனர் லைசென்ஸ் உட்பட, அரசு ஆவணங் களை, அந்தந்த துறைகளில் உடனடியாக பெறலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த புதிய இணைய தள சேவை, இன்று முதல், சென்னையை தவிர்த்து, அனைத்து மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகங்கள், மாவட்ட எஸ்.பி., அலுவலகங்களில் செயல்பாட்டுக்கு வருகிறது. சென்னை மாநகருக்கான சேவை, நாளை துவங்க இருப்பதாக, காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

*போலீசுக்கும் 3 மாதம் சிறை!*

'ஒரிஜினல் லைசென்ஸ் இல்லாத, போலீசார் மீதும்
நடவடிக்கை எடுக்கப்படும்' என, எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.நாளை முதல், வாகனங்கள் ஓட்டுவோர் கட்டாயம், 'ஒரிஜினல் லைசென்ஸ்' வைத்திருக்க வேண்டும் என்ற நடைமுறை, அமலுக்கு வருகிறது. ஒரிஜினல் லைசென்ஸ் இல்லாமல் வாகனங்கள் ஓட்டுவோர் மீது, போலீசார் வழக்குப் பதிவு செய்ய உள்ளனர்.

இந்த நடைமுறையை, 'தமிழக காவல் துறையில் பணிபுரியும், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட போலீசாரும், கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்; மீறினால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்' என, டி.ஜி.பி., அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.இது குறித்து, போலீஸ் உயர் அதிகாரிகள் கூறுகையில், 'ஒரிஜினல் லைசென்ஸ் இல்லாமல் வாகனங்கள் ஓட்டி னால், மூன்று மாதம் சிறை அல்லது, ரூ.500 அபராதம் அல்லது இரண்டையும் சேர்த்து அனுபவிக்க நேரிடும். இது, பொது மக்களுக்கு மட்டுமல்ல; போலீசாருக்கும் பொருந்தும். செப்., 1 முதல், ஒரிஜினல் லைசென்ஸ் இல்லாமல், யாரும் வாகனம் ஓட்ட வேண்டாம்' என எச்சரித்துள்ளனர்.

No comments:

Post a Comment