அரசு பள்ளிகளை தனியார் வசம் ஒப்படைக்கலாம்-நிதி ஆயோக்!
நிதி ஆயோக் இன்று பரிந்துரை செய்துள்ளது.
அரசு பள்ளிகளை மேம்படுத்தும் நோக்கில் மத்திய அரசுக்கு நிதி ஆயோக் இந்த பரிந்துரையை செய்திருக்கிறது
மாணவர்களின் எதிர் காலத்தை கருத்தில் கொண்டும் அரசுடன் இணைந்து தனியார் பள்ளிகளை நடத்தலாம் என்று பரிந்துரையில் தெரிவித்துள்ளது
இதில் 2010 -2014- ம் ஆண்டில் 13,500 அரசுப் பள்ளிகள் அதிகரித்துள்ளது. எனினும் அரசுப் பள்ளிகளில் 1.13 கோடி மாணவர்கள் சேர்க்கை குறைந்துள்ளது. அதேசமயம் தனியார் பள்ளிகளில் ஒரு கோடியே 65 லட்சம் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துள்ளது.
2014-2015- ம் ஆண்டில் 3.7 லட்சம் பள்ளிகளில் வெறும் 50க்கும் குறைவான மாணவர்கள் மட்டுமே இருப்பதாக ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.எனவே சரியாக செயல்பட முடியாத நிலையில் உள்ள அரசுப் பள்ளிகளை தனியாருடன் இணைந்து செயல்படுத்த அரசு முன்வர வேண்டும் என்று மத்திய அரசுக்கு நிதிஆயோக் பரிந்துரை செய்துள்ளது.
No comments:
Post a Comment