பான் எண்ணுடன் ஆதார் இணைப்பு... ஆகஸ்ட் 31 கெடு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, August 28, 2017

பான் எண்ணுடன் ஆதார் இணைப்பு... ஆகஸ்ட் 31 கெடு

பான் எண்ணுடன் ஆதார் இணைப்பு... ஆகஸ்ட் 31 கெடு
பான்எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கெடு, ஆகஸ்ட்31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் இந்தக் கெடுதேதி
இன்னும் ஓரிரு நாளில் முடிவடைய உள்ளது. நம் நாட்டில் வருமானவரித்துறை சார்பில் அனைவருக்கும் ‘பான்’ கார்டு எனப்படும் நிரந்தரகணக்கு அட்டை வழங்கப்படுகிறது. 
வருமான வரி செலுத்துவோர் மட்டுமல்லாது, வரிசெலுத்தாதவர்களும் பான் அட்டைப் பெறலாம். இந்த நிலையில் பான்எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என மத்தியஅரசு உத்தரவிட்டது. இதற்கான காலக்கெடு முதலில் ஜூன் 30-ம் தேதிஎன நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், அந்தக் காலக்கெடுவுக்குள் பான்எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி முழுமைபெறவில்லை.

அதேசமயம் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கானகாலக்கெடுவை நேரடி வரிவிதிப்பு கழகமும் நீட்டித்தது. இந்நிலையில், பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலஅவகாசம் ஆகஸ்டு 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஒரு வேளைஉங்கள் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கவில்லைஎன்றால், உங்களுடைய வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யமுடியாது மட்டுமல்லை, அரசின் எந்த ஒரு சமூக நலன் சார்ந்ததிட்டங்களின் பலன்களையும் பெற முடியாது .

No comments:

Post a Comment