வேளாண் பல்கலையில் 2ம் கட்ட கவுன்சிலிங் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, August 29, 2017

வேளாண் பல்கலையில் 2ம் கட்ட கவுன்சிலிங்

தமிழ்நாடு வேளாண்மை பல்கலையில், 14 உறுப்பு மற்றும், 19 இணைப்பு கல்லுாரிகள் உள்ளன. இதில், 13 பட்டப் படிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.இப்படிப்புகளில், 2,820 இடங்கள் உள்ள நிலையில், ஜூன், 19 முதல், 24 வரை முதற்கட்ட கலந்தாய்வு நடந்தது. இதில், 2,156 இடங்கள் பூர்த்தியாகின.

 'நீட்' தேர்வு அடிப்படையிலே, மருத்துவ மாணவர் சேர்க்கை நடக்கும் என அறிவிக்கப்பட்டதால், தற்போது, வேளாண் படிப்புகளில் காலியிடம், 1,627 ஆக அதிகரித்துள்ளது.இவற்றை நிரப்ப, இரண்டாம் கட்ட கலந்தாய்வு நேற்று துவங்கியது. முதல் நாளில், 218 பேர் பங்கேற்றனர். கோவை, மதுரை, திருநெல்வேலி, திருச்சி ஆகிய அரசுக் கல்லுாரிகளில், ஓ.சி., - பி.சி., - எம்.பி.சி., பிரிவினருக்கான இடங்கள் பூர்த்தியாகி விட்டன. முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு, 31ம் தேதி வகுப்புகள் துவங்குகிறது.

No comments:

Post a Comment