'ரூ.2,000 நோட்டு திரும்ப பெறப்படாது': அருண் ஜெட்லி
மத்திய நிதி அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, அருண் ஜெட்லி, டில்லியில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: புதிதாக, 200 ரூபாய் நோட்டுகளை அறிமுகம் செய்ய, ரிசர்வ் வங்கிக்கு, மத்திய அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது. 200 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கும் பணி மற்றும் அவற்றை எப்போது புழக்கத்தில் விடுவது என்பதை, ரிசர்வ் வங்கி முடிவு செய்யும்.
கடந்த ஆண்டு இறுதியில் அறிமுகம் செய்யப்பட்ட, 2,000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறும் எண்ணம், மத்திய அரசுக்கு கிடையாது. இவ்வாறு அவர் கூறினார்
No comments:
Post a Comment