அரசு மற்றும் தனியார் கல்லுாரிகள், பல்கலைகளில், கல்வி கட்டணம் உட்பட, அனைத்து பணப் பரிவர்த்தனைகளிலும், 'டிஜிட்டல்' முறையை
பின்பற்ற வேண்டும்' என, மத்திய அரசு கண்டிப்பான உத்தரவு பிறப்பித்துள்ளது.
மத்திய மனிதவள அமைச்சக கட்டுப்பாட்டில் செயல்படும், பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி., சார்பில், அனைத்து பல்கலைகள் மற்றும் கல்லுாரிகளுக்கு, சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது.
அதன் விபரம்:
அனைத்து உயர் கல்வி நிறுவனங்களிலும், பணப் பரிவர்த்தனையை, டிஜிட்டல் முறையில் மேற்கொள்ள, ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதை, கட்டாயம் பின்பற்ற வேண்டும்
கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளில், கல்வி கட்டணம், தேர்வு கட்டணம் வசூல், வணிக நிறுவனங்களுக்கான செலவுகள், ஆசிரியர்கள், ஊழியர்களின் சம்பளம் மற்றும் செலவுகள் என, அனைத்து வகையான நிதி பரிவர்த்தனையும் ரொக்கமாக மேற்கொள்ளக் கூடாது
அனைத்து மாணவர்களும், விடுதி கட்டணம், உணவு கட்டணத்தை, டிஜிட்டல் முறையில் செலுத்த வேண்டும். இதற்கு, 'ஆன் - லைன்' வங்கி முறை, வங்கி பரிவர்த்தனை அட்டையான, 'டெபிட், கிரெடிட்' கார்டு மற்றும் 'பிம் மொபைல் ஆப்' போன்ற முறைகளை பயன்படுத்தலாம்
இதற்காக, ஒவ்வொரு கல்வி நிறுவனமும், பொறுப்பு அதிகாரியை நியமித்து, டிஜிட்டல் முறை குறித்து, நிறுவன விதிகள் வகுக்க வேண்டும். இது குறித்து, ugc.ndpm@gmail.com என்ற, இ - மெயிலில் அறிக்கை அனுப்ப வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment