பள்ளிகளில் தீ தடுப்பு கருவிகள் குறித்து... ஆய்வு நடத்த திட்டம்!  தீயணைப்பு துறையினர் களமிறங்க முடிவு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, August 28, 2017

பள்ளிகளில் தீ தடுப்பு கருவிகள் குறித்து... ஆய்வு நடத்த திட்டம்!  தீயணைப்பு துறையினர் களமிறங்க முடிவு

பள்ளிகளில் தீ தடுப்பு கருவிகள் குறித்து... ஆய்வு நடத்த திட்டம்!  தீயணைப்பு துறையினர் களமிறங்க முடிவு

தீயணைப்புத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: வணிக வளாகம், வங்கிகள், அலுவலகங்களில் தீ தடுப்பு கருவி பொருத்தப்பட்டுள்ளதா;
கருவி செயல்படுகிறதா; அலுவலகத்தில் இருந்து வெளியே வர, அவசர கால வழி உள்ளதா என்பது குறித்து விரைவில் சோதனை நடத்தப்படும். தனியார் நிறுவனங்கள் மட்டுமின்றி, வட்டார போக்குவரத்து அலுவலகம், நீதிமன்ற வளாகம் உள்ளிட்ட அரசுத்துறை அலுவலகங்களில், தீ தடுப்பு கருவி, அவசர கால வழி உள்ளிட்ட வசதிகள் இருத்தல் வேண்டும்.
இவ்வாறு, தீயணைப்பு அதிகாரி கூறினார்.

வணிக வளாகம், வங்கிகள், அலுவலகங்கள், பனியன் நிறுவனங்கள், திருமண மண்டபங்கள், பள்ளிகளில் முறையான தீ தடுப்பு வசதிகள் இருக்கிறதா என்பது குறித்து சோதனை நடத்தவும் உள்ளனர்.
கடைபிடிக்க வேண்டியவை
தீ விபத்து ஏற்பட்டால், மீட்புக்கு தீயணைப்புத்துறையின் 'லேடர்' வாகனம் வந்து செல்லும் அளவுக்கு, பக்கவாட்டில் காலி இடம் இருக்க வேண்டும். அவசர காலங்களில்,
கட்டடத்தில் உள்ளோர் உடனே வெளியேற வெளிப்புறமாக தனி படிக்கட்டுகள் அமைத்திருக்க வேண்டும்.
கட்டடத்தின் மேல் தளத்தில், தீ விபத்தின் போது பயன்படுத்த பிரத்யேகமான தண்ணீர்த்தொட்டி அமைத்து, அதில் போதியளவு தண்ணீர் இருப்பு வைக்க வேண்டும்.
ஒவ்வொரு தளத்திலும் தீ விபத்தின் போது தண்ணீரை பீய்ச்சி அடிப்பதற்கான குழாய் வசதி இருத்தல் வேண்டும். தவிர, அறைகள், நடைபாதைகளில் தீ விபத்து ஏற்பட்டால், அதை தண்ணீர் பீய்ச்சி அடித்து அணைப்பதற்கான உபகரணம் அமைப்பது அவசியம்.
ெஹலிபேட் அமைக்கலாம்
அடுக்குமாடி கட்டடங்களில் தீ விபத்து ஏற்பட்டால், உடனே எச்சரிக்கும், புகை கண்டுபிடிப்பான் கருவி, அறைகள் மற்றும் நடைபாதைகளில் அமைக்க வேண்டும்.
கட்டடத்தின் உயரம், 45 மீட்டருக்கு மேல் சென்றால், அவசர கால மீட்பு பணிகளுக்கு கட்டடத்தின் மேல் பகுதியில் ெஹலிபேட் அமைக்கலாம்.

No comments:

Post a Comment