தேசிய திறனாய்வு தேர்வு: விண்ணப்பிக்க நாளை கடைசி !! - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, August 31, 2017

தேசிய திறனாய்வு தேர்வு: விண்ணப்பிக்க நாளை கடைசி !!

தேசிய திறனாய்வு தேர்வு: விண்ணப்பிக்க நாளை கடைசி !!கல்வி உதவித்தொகை பெறுவதற்கான, தேசிய திறனாய்வு தேர்வுக்கு விண்ணப்பிக்க, நாளை கடைசி நாள். நாடு முழுவதும்,
10ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, மத்திய அரசு சார்பில், தேசிய திறனாய்வு தேர்வு நடத்தப்படும். மாநில அளவிலான தேர்வில், தேர்ச்சி பெறுவோருக்கு, தேசிய அளவில் தேர்வு நடக்கும்.

இந்த தேர்வில், தேர்ச்சி பெறும் முதல், 1,000 பேருக்கு, ஆராய்ச்சி படிப்பு வரை உதவித்தொகை வழங்கப்படும். இந்த ஆண்டுக்கான தேர்வு, மாநில அளவில், நவம்பர் முதல் வாரம் நடக்கிறது. இதில், பங்கேற்க விரும்பும் மாணவர்கள், தங்கள் பள்ளி தலைமை ஆசிரியர்கள் வழியே விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பங்களை, www.dge.tn.gov.in என்ற, இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். விண்ணப்ப பதிவு, ஆகஸ்ட், 21ல் துவங்கியது. நாளைக்குள், பள்ளி தலைமை ஆசிரியர்களிடம், மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப தகவல்களை, செப்., 4 முதல், 13க்குள், ஆன் - லைனில், தலைமை ஆசிரியர்கள் பதிவு செய்ய வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment