கணினி அறிவியல் பாடத்தை மட்டும் தொடர்ந்து புறகணிக்கும் தமிழக கல்வித்துறை... - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, August 30, 2017

கணினி அறிவியல் பாடத்தை மட்டும் தொடர்ந்து புறகணிக்கும் தமிழக கல்வித்துறை...

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பள்ளிக் கல்வித்துறையில் #கணினி அறிவியல் இன்று நீங்காத ஒரு இடத்தைப் பிடித்துவிட்டது… 
ஆனால்,
தமிழகத்தில் மட்டும்தான் கணினி அறிவியல் ஒரு தீண்டத்தகாத பாடமாக சபிக்கப்பட்டுள்ளது…
2011-ல் கொண்டுவரப்பட்ட சமச்சீர் பாடத்திட்டத்தில் கணினி அறிவியலும் ஒரு தனி பாடமாக அறிமுகப்படுத்தப்பட்டது… ஆனால், இந்த திட்டம் (ICT) அரசியல் காழ்ப்புணர்ச்சியினால் முற்றிலும் சீரழிக்கப்பட்டது… 
2012-ல் வெளியான அரசாணையில் அனைத்து பள்ளிகளுக்கும் ICT-திட்டம் செயல்படுத்தப்படும் என்று முடிவு செய்யப்பட்டிருந்தது… பிறகு, அவசரச் சட்டத்தின் கீழ் இந்த திட்டம் 4000 பள்ளிகள் என வரைவு செய்யப்பட்டது. தற்போது இந்த 4000 பள்ளிகளும் சுருக்கப்பட்டு “1000 பள்ளிகளுக்கு மட்டும் ICT-திட்டம்” என முற்றிலும் சுருக்கப்பட்டுள்ளது….
இதுவும் 1000 பள்ளிகளிலாவது செயல்படுத்தப்படுமா (அ) 500 பள்ளிகள் என சுருங்குமா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்…. கல்வித்துறையின் ஆட்சியாளர்கள் மற்றும் அதிகாரிகளை நேரில் சந்தித்து கேட்டால் இந்த திட்டத்தை செயல்படுத்த அரசிடம் போதிய நிதி இல்லை என்றுதான் பதில் கிடைக்கிறது….
அப்படியானால், சென்ற கல்வியாண்டில் மத்திய அரசு ICT-திட்டத்திற்காக ஒதுக்கீடு செய்த ரூ.900/- கோடி நிதிப்பணம் எங்கே போனது?? 1992-லிருந்து இன்று வரையில் கணினி அறிவியலின் மேம்பாட்டுக்காக ஒதுக்கப்பட்ட ரூ.2,50,000/- கோடி நிதி என்னவாயிற்று?? 
தமிழகத்திற்குப் பிறகு கணினி அறிவியலை செயல்படுத்திய கேரளாவில் இன்று பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் கணினி அறிவியலில் தேர்ச்சி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது… ஆந்திரா, புதுச்சேரி போன்ற அண்டை மாநிலங்களில் அனைத்து அரசு பள்ளிகளிலும் கணினி அறிவியல் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது… ஆனால், தமிழகத்தில் மட்டும்தான் கணினி அறிவியல் தொடர்ந்து நிராகரிக்கப்படுகிறது…
பள்ளிப் படிப்பை முடித்து கல்லூரி படிப்பை தொடரும் ஒவ்வொரு மாணவனுக்கும் கணினி அறிவியல் என்பது ஒரு முக்கிய அங்கமாகிவிட்டது… பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளின் அனைத்து துறைகளிலும் கணினி அறிவியல் ஒரு முக்கிய பாடமாக பின்பற்றப்படுகிறது… 
இவ்வாறு, தொழில்நுட்பம் தழைத்துவிட்ட இந்த 21-ஆம் நூற்றாண்டில் தமிழக அரசு பள்ளிகளில் மட்டும் கணினி அறிவியல் பாடம் நிராகரிக்கப்படுவது அரசு பள்ளிகளின் கல்வித்தரத்தை சரித்துள்ளது…. 
பாடத்திட்டக்குழு அதிகாரிகளிடம் ICT திட்டத்தைப் பற்றி கேட்கும்போது இந்த திட்டத்தைப் பற்றிய எந்தவொரு செயலும் இன்னும் ஆரம்பிக்கப்படுடவில்லை என கூறுவது அதிர்ச்சி அளிக்கிறது…
தனியார் பள்ளிகளில் 1-ஆம் வகுப்பு முதலே கணினி அறிவியல் ஒரு பாடமாக பயிற்றுவிக்கப்படுகிறது….  ஆனால் அரசு பள்ளிகளில் மேல்நிலை வகுப்புகளில் கூட 2006ம் ஆண்டிலிருந்து இன்று வரை புதிதாக தரம் உயர்த்தம் செய்யும் பள்ளிகளில் கணினி அறிவியல் மறுக்கப்படுவது அரசு பள்ளிகளின் கல்வித்தரத்தை குறைத்துவிட்டது என்றே கூறலாம்….
இறுதிவரையில் அரசு பள்ளிகளும், அரசு பள்ளி மாணவர்களும், கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரிகளும் விளங்காமல் போவதே திடமான விதி என அரசாணைகளில் மறைத்து எழுதிவிட்டார்களோ என்ற மாயச் சிந்தனையே எழுகிறது…
ICT திட்டத்தை செயல்படுத்த ஆறு முறைக்கு மேல் தனியார் நிறுவனங்களுக்கு டெண்டர் விடப்பட்டு மீண்டு ரத்து செய்திருப்பது கணினி அறிவியல் மீதான பகிரங்க படுகொலையே… 
கணினி அறிவியலுக்கென பி.எட்., பட்டம் பெற்ற தகுதிவாய்ந்த 40000பட்டதாரி ஆசிரியர்கள் இருக்கும் பட்சத்தில் அவர்களை பணி நியமனம் செய்யாமல் தனியார் நிறுவனங்களின் ஒப்பந்த ஊழியர்களை சுழற்சி-முறையில் (Yearly Agreement) பணி நியமனம் செய்வதை  தமிழக அரசு இனி வரும் க்லங்களில் கைவிடவேண்டும்..
சென்ற ஆட்சியிலிருந்து இன்றைய ஆட்சிவரை பள்ளிக் கல்வித்துறைக்கு மட்டும் ஒன்பது அமைச்சர்கள் டிரான்ஸ்பர் செய்யப்பட்டிருக்கிறார்கள்… ஒரு துறை ஆறு ஆண்டுகளில் ஒன்பது அமைச்சர்களை சந்தித்திருப்பது தமிழக கல்வித்துறையின் சாபத்தையே பறைசாற்றுகிறது….
ஆனால், பள்ளிக் கல்வித்துறையின் அதிகாரிகளை எட்டு ஆண்டுகளுக்கும் மேல் மாற்றம் செய்யாமல் இருந்தது வேடிக்கையாகவே உள்ளது… 
மாண்புமிகு கல்வி அமைச்சர் ,மதிபபுமிகு கல்வித்துறை அதிகாரிகள் இந்த ஆண்டிலாவது அனைத்து அரசு பள்ளிகளிலும் கணினி அறிவியல் பாடம் நடைமுறைப் படுத்தப்படுமா என்பது மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்களின் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது கணினி கல்விக்காக தமிழக அரசு தனிக் கவனம் செலுத்த வேண்டும்..
செய்தி:G. RAJKUMAR(Web-Admin)

வெ.குமரேசன்,
மாநிலப் பொதுச்செயலாளர்,
9626545446,
தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்.®655/2014

No comments:

Post a Comment