செட்' தேர்வில் புதிய விதி அடுத்த ஆண்டில் அமல் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, August 28, 2017

செட்' தேர்வில் புதிய விதி அடுத்த ஆண்டில் அமல்

பேராசிரியர் பணிக்கான, 'செட்' தேர்வில், அடுத்த ஆண்டு முதல், புதிய விதி அமலாகிறது.கல்லுாரிகளில், உதவி பேராசிரியர் பணியில் சேர, முதுநிலை பட்டப்படிப்பு முடித்தவர்கள், தேசிய அளவிலான, 'நெட்' அல்லது மாநில அளவிலான, 'செட்' தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
இதில்,தமிழக அரசின் சார்பில், 'செட்' தேர்வை, கொடைக்கானல், தெரசா பல்கலை, இரு ஆண்டுகளாக நடத்துகிறது.

இந்த தேர்வில், தகுதி மதிப்பெண் பெறுவோரில், முதல், ௧௫ சதவீதம் பேர் மட்டும், தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுகின்றனர். இந்த விதி, பல ஆண்டுகளாக பின்பற்றப்படுகிறது. இந்நிலையில், வரும் ஆண்டு முதல், புதிய தேர்ச்சி விதியை கடைப்பிடிக்க, மாநில அரசுகளுக்கு, மத்திய அரசின் பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி., உத்தரவிட்டு உள்ளது.

இதன்படி, இனி, 'செட்' தேர்வு எழுதுவோரில், தகுதி பெறுவோரில், அதிக மதிப்பெண் பெற்ற, 6 சதவீதம் பேர் மட்டுமே, தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட உள்ளனர். இந்த விதியை, வரும் கல்வி ஆண்டில், தமிழக அரசு பின்பற்றும் என, உயர் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

No comments:

Post a Comment