பிளஸ் 1 விடைத்தாள் திருத்தும் பணிகள் நிறைவு: மே 8-இல் தேர்வு முடிவுகள் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, April 23, 2019

பிளஸ் 1 விடைத்தாள் திருத்தும் பணிகள் நிறைவு: மே 8-இல் தேர்வு முடிவுகள்

பிளஸ் 1 விடைத்தாள் திருத்தும் பணிகள் நிறைவு: மே 8-இல் தேர்வு முடிவுகள்
பிளஸ் 1 பொதுத்தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் திங்கள்கிழமையுடன் நிறைவு பெற்றது. இதைத் தொடர்ந்து திட்டமிட்டபடி மே 8-ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட உள்ளன.
தமிழக பள்ளி கல்வித்துறையின் சமச்சீர் பாடத்திட்டத்தில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 ஆகிய வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் 1-இல் தொடங்கி 29-ஆம் தேதியுடன் நிறைவடைந்தன.
இதையடுத்து பொதுத்தேர்வு விடைத்தாள்களைத் திருத்தும் பணிகள் தொடங்கின. இதில், பிளஸ் 2 பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்துதல் பணி நிறைவடைந்து, தேர்வு முடிவுகள் கடந்த 19-இல் வெளியிடப்பட்டன. பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிகளும் கடந்த வாரம் முடிந்துவிட்டது. தொடர்ந்து, தேர்வு முகாம்களில் பிளஸ் 1 தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் மட்டும் நடைபெற்று வந்தன. மொத்தம் 8 லட்சத்து 22 ஆயிரம் மாணவர்கள் எழுதிய விடைத்தாள்கள் திருத்தும் பணியில் 46 ஆயிரம் முதுநிலை ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், பிளஸ் 1 விடைத்தாள் திருத்தும் பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளன. பெரும்பாலான தேர்வு முகாம்களில் விடைத்தாள் திருத்தும் பணிகள் திங்கள்கிழமை நிறைவு பெற்றன. வேலுர் உள்ளிட்ட சில மாவட்ட மையங்களில் மட்டும் விடைத்தாள் திருத்தும் பணிகள் செவ்வாய்க்கிழமை முடிவடையவுள்ளது.
இதையடுத்து மதிப்பெண்கள் பதிவேற்றம் மற்றும் தற்காலிக சான்றிதழ் தயாரிக்கும் பணிகளை தீவிரப்படுத்த தேர்வுத்துறை திட்டமிட்டுள்ளது. மேலும், ஏற்கெனவே அறிவித்தபடி பிளஸ் 1 தேர்வு முடிவுகள் மே 8-இல் வெளியிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment