ஆதார் மட்டுமல்ல... இதில் எந்த அடையாள அட்டை இருந்தாலும் தேர்தலில் வாக்களிக்கலாம்! - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, April 3, 2019

ஆதார் மட்டுமல்ல... இதில் எந்த அடையாள அட்டை இருந்தாலும் தேர்தலில் வாக்களிக்கலாம்!

தேர்தல் களம் இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் சூடு பிடித்து வருகிறது. ஒவ்வொரு தேர்தலிலும் வாக்காளர் அட்டை இல்லாத வாக்காளர்கள் தங்களது வாக்கை பதிவு செய்ய முடியாமல் தவித்து வருகிறார்கள். அதைத் தொடர்ந்து தற்போது புதிய வழிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளன.
யூனியன் அரசாங்கம், மாநில அரசு, பொதுப்பணித் துறை நிறுவனங்கள் மற்றும் வங்கிப் புத்தகங்கள் அல்லது அஞ்சலகப் புத்தகங்கள் உள்ளிட்ட 10 வகையான ஆவணங்களைக் காண்பித்து தங்களை வாக்காளர்களாக அடையாளப்படுத்தி வாக்களிக்க முடியும்.
1. ஆதார் அட்டை
இது தனிநபரின் பயோமெட்ரிக் கொண்ட ஒரு குடிமகனின் தனிப்பட்ட அடையாள அட்டை ஆகும். இதைப் பயன்படுத்தியும் வாக்களிக்கலாம்.
2. பாஸ்போர்ட்
சர்வதேச பயணத்திற்காக ஜனாதிபதி வழங்கும் இந்திய பாஸ்போர்ட் இந்தியக் குடிமகனின் அடையாளமாகும். பாஸ்போர்ட்டை வாக்களிக்கும் ஒரு மாற்று ஆவணமாக வாக்காளர் பட்டியலில் பெயர் இருப்பின் பயன்படுத்தலாம்.
3. ஓட்டுநர் உரிமம்
ஓட்டுநர் உரிமமானது வாகன ஓட்டிக்கான அடையாள நோக்கத்திற்காகப் பிராந்திய போக்குவரத்து நிர்வாகத்தால் வழங்கப்படுகின்றன. ஓட்டுநர் உரிமம் ஓர் அதிகாரபூர்வ ஆவணம் என்பதால் வாக்களிக்கும் ID க்கு மாற்றாகவும் பயன்படுத்தப்படலாம்.
4. போட்டாவுடன் கூடிய அடையாள அட்டை
மத்திய / மாநில அரசு வேலையில் உள்ள ஊழியர்கள், அரசாங்கத்தால் வழங்கப்பட்ட தங்களது சேவை அட்டையைக் காட்டி வாக்களிக்கலாம்.
5. வங்கிகள், தபால் - பாஸ் புக்குகள்
ஓர் அரசாங்க வங்கியால் அல்லது தபால் நிலையத்தால் வழங்கப்பட்டுள்ள புத்தகத்தை வாக்காளர் ஐடிக்கு மாற்றாகப் பயன்படுத்தப்படலாம்.
6. ஓய்வு ஊதிய ஆவணங்கள்
மத்திய அரசாங்கம் வழங்கியுள்ள ஓய்வூதிய ஆவணத்தைப் பயன்படுத்தி வாக்களிக்கலாம்.
7. வருமான வரி பான் அட்டை (PAN Card)
இந்திய வருமான வரித் துறையின் கீழ் குடிமகன்கள் அனைவருக்கும் ஒரு தனிப்பட்ட நிரந்தரக் கணக்கு எண்ணாக பத்து இலக்கு எண் வழங்கப்பட்டுள்ளது. PAN என்பது ஒரு தொடக்க வங்கிக் கணக்கு போன்ற நிதிப் பணிக்காக தேவைப்படும் ஆவணம் மற்றும் சம்பளத்திற்குரிய வரியைப் பெறும் மூலமாகவும் உள்ளது. வாக்களிக்கும் நாளில் PAN யை வாக்களிக்கப் பயன்படுத்தப்படலாம்.
8. தேசிய மக்கள்தொகை பதிவு ஸ்மார்ட் கார்டு
தேசிய மக்கள்தொகை பதிவு (NPR) வழங்கிய ஸ்மார்ட் கார்டுகளையும் வாக்களிக்கப் பயன்படுத்தலாம்.
9. தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் வழங்கப்பட்ட அடையாள அட்டை

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத சட்டத்தின் கீழ் பணியாற்றப்பட்டவர்கள் புகைப்பட அடையாள அட்டை வைத்திருக்கிறார்கள். அதனையும், வாக்காளர் ஐடிக்கு மாற்றாக வாக்காளர் பட்டியலில் பெயர் இருப்பின் வாக்களிக்கப் பயன்படுத்தப்படலாம்.
10. மருத்துவக் காப்பீடுத் திட்டத்திற்காக வழங்கப்பட்ட ஸ்மார்ட் கார்டுகள்
RSBY (Rashtriya Swasthya Bima Yojana) என்பது தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் மூலம் தொடங்கப்பட்டதாகும். RSBY-ஒரு குடும்பத்தில் உள்ள அனைவருடைய பயோமெட்ரிக் அடங்கிய ஸ்மார்ட் கார்டு. இதையும் வாக்களிக்க ஒரு மாற்றாகப் பயன்படுத்தப்படலாம்.
மிக முக்கியமான ஒன்று, வாக்காளர் பட்டியலில் நமது பெயர் இடம் பெற்றிருப்பது. அது இல்லாமல் மேற்குறிப்பிட்ட எதைக் காட்டினாலும் வாக்களிக்க முடியாது. எனவே, முதலில் வாக்காளர் பட்டியலில் நமது பெயர் இருக்கிறதா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டியது மிக மிக அவசியம்.

வாக்களிப்பது நமது ஜனநாயகக் கடமை. எனவே, ஏப்ரல் 18ம் தேதி மறக்காமல், புகைப்பட அடையாள அட்டை அல்லது மேற்கண்ட  ஆவணங்களில் ஒன்றுடன் முதல் வேலையாகப் போய் ஓட்டு போட்டு விட்டு வந்து விடுங்கள்

No comments:

Post a Comment