தமிழகத்தில் அங்கீகாரம் இல்லாமல் எந்தவொரு பள்ளியும் இயங்கக் கூடாது - பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை! - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, April 10, 2019

தமிழகத்தில் அங்கீகாரம் இல்லாமல் எந்தவொரு பள்ளியும் இயங்கக் கூடாது - பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை!

தமிழகத்தில் அங்கீகாரம் இல்லாமல் எந்தவொரு பள்ளியும் இயங்கக் கூடாது - பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை!
தமிழகத்தில் அங்கீகாரம் இல்லாமல் எந்தவொரு பள்ளியும் இயங்கக் கூடாது என பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுவரை அங்கீகாரம் இல்லாத பள்ளிகள் உடனடியாக அங்கீகாரத்தை பெற வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, வரும் கல்வி ஆண்டு முதல் அங்கீகாரம் இல்லாத பள்ளிகளில் மாணவர்கள் பயில்வதை தடுப்பதை உறுதி செய்யும் நோக்கத்தில் கல்வித்துறை இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளது. இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளி கல்வித்துறை இயக்ககம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில், தங்கள் மாவட்டத்தில் உள்ள அங்கீகாரம் இன்றி செயல்படும் பள்ளிகளை வட்டார கல்வி அலுவலர்கள் கண்டறிய வேண்டும் என்றும் அவ்வாறு கண்டறியும் பள்ளிகளின் விவரங்களை செய்தித்தாள்கள் வாயிலாக விளம்பரப்படுத்த வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும் பள்ளி வாயிலில் பெற்றோர்கள் மாணவர்கள் அறிந்திடும் வகையில் அங்கீகாரம் இல்லாத பள்ளி என்று அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் சென்னையில் அங்கீகாரம் இல்லாமல் செயல்பட்டு வந்த பள்ளியில் பயின்ற மாணவர்கள் 10-ம் வகுப்பு தேர்வு எழுத முடியாத நிலை ஏற்பட்டதை பள்ளி கல்வி இயக்குநகரகம் சுற்றறிக்கையில் சுட்டிக்காட்டியிருந்தது. தமிழகத்தில் உள்ள அங்கீகாரம் பெறாத பள்ளிகள் குறித்த அனைத்து விவரங்களையும் பள்ளிக்கல்வித்துறையிடம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் அடுத்த மாதம் 25-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல அங்கீகாரமற்ற பள்ளிகள் செயல்படவில்லை என்பதை அனைத்து கல்வி அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. உயர்நீதிமன்ற தீர்ப்பை பின்பற்றி பள்ளிக்கல்வித்துறை இந்த சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது.


No comments:

Post a Comment