தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு: - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Saturday, April 13, 2019

தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு:

தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளின் தலைமை
ஆசிரியர்கள் கவனத்திற்கு:
தொடக்கக் கல்வித் துறை பள்ளிகளுக்கு 2018-19 ஆம் கல்வியாண்டின்  கடைசி வேலை நாள் இன்று (13.04.2019)
பள்ளிகள் மீண்டும் திறக்கும் தேதி 03/06/2019(திங்கள்).
தேர்ச்சி சார்ந்த மற்றும் பிறபதிவேடுகள் அனைத்தும் முடித்த பின் வட்டாரக் கல்வி அலுவலரிடம் விரைவில் ஏற்பளிப்பு பெற வேண்டும்.
வேலை நாட்கள் 210 க்கு குறைவுபட்டால் தவிர்ப்புக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
ஏற்பளிப்பு பெற்ற பின், மாணவர்களுக்கு விரைவில் மாற்றுச் சான்றிதழ் வழங்க வேண்டும்.
தொடக்கப் பள்ளிகள் 5 ஆம் வகுப்பு மாணவர்களையும், நடுநிலைப் பள்ளிகள் 8 ஆம் வகுப்பு மாணவர்களையும் EMIS இணைய தளத்தில் Student Common Pool க்கு அனுப்ப வேண்டும்.
பிற வகுப்பு மாணவர்களுக்கு அடுத்த வகுப்பிற்கு EMIS இணையதளத்தில் தேர்ச்சி அளிக்க வேண்டும்.
விடுமுறையை  பயனுள்ள விதத்தில் கழிக்க அறிவுரை வழங்க வேண்டும்.
கோடைக்கால நோய்கள் மற்றும் அதிக வெப்பத்திலிருந்து காத்துக் கொள்ளும் வழிமுறைகள் பற்றிய குறிப்புரைகள் வழங்க வேண்டும்.
விடுமுறை நாட்களில், பள்ளிக் கட்டிடம், குடிநீர்த் தொட்டி, குழாய்கள், கழிப்பறைகள், பள்ளி சுற்றுச்சுவர் இவற்றை பாதுகாக்க அறிவுறுத்த வேண்டும்.
வாக்குச்சாவடியாக உள்ள பள்ளிகள், தேர்தல் பணிக்கு வரும் ஆசிரியர்களுக்கு தேவையான உதவிகள் செய்யுமாறு அறிவுறுத்த வேண்டும்.
வரும் கல்வியாண்டில் முதல் வகுப்பில் சேர தகுதி படைத்த அதாவது 31.07.2014 ஆம் தேதிக்கு முன் பிறந்த அனைத்து குழந்தைகளையும் நம் பள்ளியில் சேர்க்க, அக்குழந்தைகளின் பெற்றோரை சந்தித்து வலியுறுத்த,அறிவுறுத்த வேண்டும்.
விடுமுறையில் கையெழுத்து பயிற்சி, வாய்ப்பாடு, தமிழ் கதை புத்தகங்கள் வாசிக்க அறிவுறுத்த வேண்டும்.

No comments:

Post a Comment