அனைத்து பள்ளிகளும் 6, 7, 8-ம் வகுப்புகளுக்கான தேர்வுமுடிவுகளை மே 2-ம் தேதிக்குள் மாவட்ட கல்வி அதிகாரியிடம் ஒப்புதல் பெற்ற பின்னர் வெளியிட வேண்டும் : பள்ளிக்கல்வித் துறை உத்தரவு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, April 10, 2019

அனைத்து பள்ளிகளும் 6, 7, 8-ம் வகுப்புகளுக்கான தேர்வுமுடிவுகளை மே 2-ம் தேதிக்குள் மாவட்ட கல்வி அதிகாரியிடம் ஒப்புதல் பெற்ற பின்னர் வெளியிட வேண்டும் : பள்ளிக்கல்வித் துறை உத்தரவு

அனைத்து பள்ளிகளும் 6, 7, 8-ம் வகுப்புகளுக்கான தேர்வுமுடிவுகளை மே 2-ம் தேதிக்குள் மாவட்ட கல்வி அதிகாரியிடம் ஒப்புதல் பெற்ற பின்னர் வெளியிட வேண்டும் : பள்ளிக்கல்வித் துறை உத்தரவு
8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களைக் கட்டாய தேர்ச்சி செய்ய வேண்டுமென பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. மீறினால் அதனால் ஏற்படும் பின்விளைவுகளுக்கு அந்தந்தப் பள்ளிகளே முழு பொறுப்பு ஏற்க வேண்டும் என்று எச்சரிக்கையும் விடுத்துள்ளது.
இந்தியா முழுவதும் இலவசக் கட்டாயக் கல்வி உரிமை சட்டப்படி 1 முதல் 8-ம் வகுப்பு வரை மாணவர்களை கட்டாயத் தேர்ச்சி செய்யும் முறைஅமலில் உள்ளது. இதனால் மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்படுவதாகக் கூறி, 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்துவதற்கான சட்டத் திருத்தத்தை கடந்த குளிர்காலக் கூட்டத்தொடரில் மத்திய அரசு கொண்டு வந்தது.இந்த சட்டத் திருத்தத்தை அமல்படுத்த முடிவுசெய்து தமிழக அரசு முன்னேற்பாடுகளை தொடங்கியது. இதற்கு ஆசிரியர் கள், கல்வியாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் உட்பட பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்புதெரிவித்தனர். இதையடுத்து தமிழக அரசு தனது முடிவில் பின் வாங்கியது. இந்நிலையில் மாநிலம் முழுவதும் பல்வேறு தனியார் பள்ளிகளில் படிக்கும் 6, 8-ம் வகுப்பு மாணவர்களின் தேர்ச்சியை அதன் நிர்வாகங்கள் நிறுத்தி வைப்பதாகப் புகார்கள் எழுந்தன.
சமீபத்தில் சென்னையில் தனியார் மழலையர் பள்ளியில் எல்கேஜி படித்த மாணவியின் தேர்ச்சியை நிறுத்தி வைத்தது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. பின்விளைவுகளுக்கு பொறுப்புஇதைத் தவிர்க்க தமிழகத்தில் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களைக் கட்டாயத் தேர்ச்சி செய்யாவிட்டால், அதனால் ஏற்படும் பின்விளைவுகளுக்கு பள்ளிகளே பொறுப்பேற்க வேண்டும் என பள்ளிக்கல்வித் துறை எச்சரித்துள்ளது.
இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் வழியாக அனைத்துவித பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் மற்றும்முதல்வர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
அரசு, அரசு உதவி மற்றும் தனியார் பள்ளிகளில்பயிலும் மாணவர்களுக்கு தேர்வு முடிவுகளை இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் விதிகளைப் பின்பற்றி வெளியிட வேண்டும். அனைத்து பள்ளிகளும் 6, 7, 8-ம் வகுப்புகளுக்கான தேர்வுமுடிவுகளை மே 2-ம் தேதிக்குள் மாவட்ட கல்வி அதிகாரியிடம் ஒப்புதல் பெற்ற பின்னர் வெளியிட வேண்டும். அதேநேரம் நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகளைத் தளர்த்தி தேர்ச்சி அளிக்க முதன்மைக் கல்வி அதிகாரியின் சிறப்புஅனுமதி பெறுவது அவசியம். மேலும், 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் அனைவருக்கும் கட்டாயத் தேர்ச்சி அளிக்கப்பட வேண்டும். இல்லையெனில் அதனால் ஏற்படும் பின்விளைவுகளுக்கு அந்தந்தப் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் அல்லது முதல்வர்கள்தான் பொறுப்பேற்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தலைமையாசிரியர்கள் குழு
இதற்கிடையே 6, 7, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்தப்பட்டு, மாவட்ட அளவில் தலைமையாசிரியர்கள் குழு அமைக்கப்பட்டு, குறிப்பிட்ட மதிப்பெண்கள் நிர்ணயம் செய்து தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment