வாக்குப்பதிவின்போது அலுவலர்கள் கவனமுடன் இருக்க அறிவுறுத்தல் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, April 15, 2019

வாக்குப்பதிவின்போது அலுவலர்கள் கவனமுடன் இருக்க அறிவுறுத்தல்

வாக்குப்பதிவின்போது அலுவலர்கள் கவனமுடன் இருக்க அறிவுறுத்தல்

*வாக்குப்பதிவின்போது அலுவலர்கள் மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும் என்றார்  ஆட்சியரும், மாவட்டத் தேர்தல் அலுவலருமான ஆ. அண்ணாதுரை*
*ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், மண்டல அலுவலர்கள், காவல் துறை அலுவலர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டத்தில் அவர் பேசியது*
*தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் வாக்குப் பதிவுக்கு முன் தினம், வாக்குப் பதிவு தினம் மற்றும் வாக்குப் பதிவுக்கு பின்னர் மேற்கொள்ள வேண்டிய பணிகளை மிகவும் கவனமுடன் செய்ய வேண்டும்*
*புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் சீட்டை வாக்களிப்பதற்கான அடையாள அட்டையாக அனுமதிக்கக் கூடாது*
*தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள 12 அடையாள சான்றுகளை மட்டுமே வாக்களிப்பதற்கு அனுமதிக்க வேண்டும்*
*மாதிரி வாக்குப்பதிவின்போது அனைத்து வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் முகவர்கள் உடன் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்*
*வாக்குச் சாவடியில் பயன்படுத்தப்படும் உபகரணங்கள் அனைத்தும் உள்ளனவா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்*
*வாக்குச் சாவடிக்கு மாலை 6 மணி வரை வாக்களிக்க வரும் வாக்காளர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும். மாலை 6 மணிக்குள் வாக்குச்சாவடிக்கு வரும் வாக்காளர்களுக்கு டோக்கன் தர வேண்டும் என்றார் ஆட்சியர்

No comments:

Post a Comment