பிளஸ் 2 கணித தேர்வு: பள்ளிக் கல்வித்துறை வரலாற்றில் முதல் முறையாக 7 நாட்கள் விடுமுறை - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Saturday, March 14, 2015

பிளஸ் 2 கணித தேர்வு: பள்ளிக் கல்வித்துறை வரலாற்றில் முதல் முறையாக 7 நாட்கள் விடுமுறை

தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் பிளஸ்-2 தேர்வு கடந்த 5-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன. 8 லட்சத்து 75 ஆயிரம் மாணவ–மாணவிகள் தேர்வை எழுதி வருகின்றனர்.
மாணவர்கள் அதிக மதிப்பெண் எடுக்கவும், தோல்வி விகிதம் குறைக்கும் நோக்கத்திலும் ஒவ்வொரு தேர்விற்கும் போதுமான கால இடைவெளி விடப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்தாண்டு ஒவ்வொரு தேர்வுக்கும் ஓரிரு நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் பள்ளிக்கல்வி துறை வரலாற்றிலேயே முதல் முறையாக கணித தேர்விற்கு 7 நாட்கள் இடைவெளி வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 10–ந்தேதி ஆங்கிலம் இரண்டாம் தாள் தேர்வு நடைபெற்றது. அதனையடுத்து கணிதத்தேர்வு வருகிற 18–ந்தேதி நடைபெற உள்ளது. இதுவரை இவ்வளவு நாட்கள் கால அவகாசம் கொடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment