திருப்பூர் மாவட்டத்தில், தேசிய திறனாய்வுத் தேர்வு எழுதிய, 107 மாணவர்களுக்கு, கல்வி உதவித்தொகை வழங்குவதில், தாமதம் ஏற்பட்டுள்ளதால், மாணவர்கள் வேதனைக்குள்ளாகியுள்ளனர்.அரசுப்பள்ளி மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக, மத்திய அரசின் சார்பில், எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, தேசிய திறனாய்வுத்தேர்வு நடத்தப்படுகிறது.
இத்தேர்வில், வெற்றி பெறும் மாணவர்களுக்கு, அவர்களின் படிப்பு காலம் முடியும் வரை, மாதம் 500 ரூபாய் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. மாணவர்களின், மதிப்பெண் அடிப்படையில், உதவித்தொகை வழங்க தேர்வு செய்யப்படுகின்றனர். இந்நிலையில், தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு, கல்வி உதவித்தொகை வழங்குவதில்
தாமதம் ஏற்பட்டு வருகிறது.
திருப்பூர் மாவட்டத்தில், கடந்தாண்டு, 3,181 மாணவர்கள் தேசிய திறனாய்வுத்தேர்வு எழுதினர். இதில், 109 மாணவர்கள், தேர்ச்சி பெற்றனர். இம்மாணவர்களுக்கு, தற்போது வரை, உதவித்தொகை வழங்கப்படவில்லை. கடந்த மூன்றாண்டு காலமாகவே, இத்தொகை வழங்குவதில், தாமதம் உள்ளதாக கூறப்படுகிறது.
திருப்பூர் மாவட்ட கல்வி அதிகாரி ஒருவர் கூறுகையில், 'இத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, வங்கிக்கணக்கு துவக்கித்தருவது, மட்டுமே, மாவட்ட கல்வித்துறை மூலம் செய்யப்படுகிறது. அடுத்த கட்ட நடவடிக்கைகள், மத்திய அரசின் மூலமே, செய்யப்படும். தேர்ச்சி பெற்று, உதவித்தொகை கிடைக்காத மாணவர்கள் குறித்து, அரசுக்கு நினைவூட்டப்படும்,' என்றார்.
No comments:
Post a Comment