தனியார் பள்ளி வேன் கவிழ்ந்து குழந்தைகள் படுகாயம் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Saturday, March 14, 2015

தனியார் பள்ளி வேன் கவிழ்ந்து குழந்தைகள் படுகாயம்

முதுகுளத்தூர் அருகே பள்ளி வேன் கவிழ்ந்த விபத்தில், படுகாயம் அடைந்த 4 மாணவ, மாணவிகள் மேல் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். முதுகுளத்தூர் அருகேயுள்ள கொழுந்துரையில் தனியார் பள்ளி இயங்கி வருகிறது. நேற்று பள்ளி முடிந்தவுடன் கொழுந்துரையில் இருந்து செம்பொன்குடிக்கு 42 மாணவ, மாணவிகளுடன் வேன் கிளம்பியது. வழியில் சூசையப்பர்பட்டி அருகில் கட்டுப்பாட்டை இழந்து வேன் கவிழ்ந்தது. இதில் வேனில் சிக்கிய மாணவ,மாண விகளை அருகில் இருந்த கிராம மக்கள் காப்பாற்றினர்.
விபத்தில் காயமடைந்த மாணவ, மாணவிகளை சத்திரக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதில் படுகாயமடைந்த 4 மாண விகள் மேல் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தகவல் அறிந்த முதுகுளத்தூர் தாசில்தார் மீனாட்சி(பொறுப்பு), மண்டல துணை வட்டாட்சியர் சம்பத், கிராம நிர்வாக அலுவலர் சண்முகவேல் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஆறுதல் கூறினர். பின்னர் மாற்று வாகனத்தில் மாணவ, மாணவிகளை அவர்களது வீடுகளுக்கு அனுப்பி வைத்தனர்.

No comments:

Post a Comment