குறைந்தபட்ச மாத பென்ஷன் ரூ.1,000. - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, April 30, 2015

குறைந்தபட்ச மாத பென்ஷன் ரூ.1,000.

குறைந்தபட்ச மாத பென்ஷன், 1,000 ரூபாய்' என, கடந்த ஆண்டில் நிர்ணயித்த மத்திய அரசு, அதைத் தொடருமா என்ற சந்தேகம் எழுந்த நிலையில், 'கால வரையின்றி, குறைந்தபட்ச பென்ஷன், 1,000 ரூபாயாக தொடரும்' என, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று கூடிய, மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.

             குறைந்தபட்ச பென்ஷன் தொகையை, 1,000 ரூபாயாக நிர்ணயித்து, பிரதமர் மோடி அரசு, கடந்த ஆண்டு செப்டம்பரில் அறிவிப்பு வெளியிட்டது. இது, கடந்த மார்ச் 31ம் தேதியுடன் நிறுத்தப்பட்டது. பென்ஷன் வழங்கி வந்த, இ.பி.எப்., நிறுவனத்திற்கு, மத்திய அரசிடம் இருந்து, அதை தொடர்வதற்கான உத்தரவு வராததால், ஏப்ரல் மாதம் பென்ஷனில் குளறுபடி ஏற்பட்டது.இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையில் கூடிய, மத்திய அமைச்சரவை கூட்டத்தில், குறைந்தபட்ச பென்ஷனாக, 1,000 ரூபாயை காலவரையின்றி தொடர்வது என, முடிவு செய்யப்பட்டது. இதனால், மத்திய அரசுக்கு, ஆண்டுக்கு, 850 கோடி ரூபாய் கூடுதல் செலவாகும். 20 லட்சம் பென்ஷன்தாரர்கள் பயன் பெறுவர்.

No comments:

Post a Comment