திறந்த வெளியில் குப்பை, இலை, பிளாஸ்டிக் மற்றும் ரப்பர் கொளுத்தினால் ரூ. 5000 அபராதம்: பசுமை தீர்ப்பாயம் உத்தரவு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, April 28, 2015

திறந்த வெளியில் குப்பை, இலை, பிளாஸ்டிக் மற்றும் ரப்பர் கொளுத்தினால் ரூ. 5000 அபராதம்: பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

நாட்டின் தலைநகரான டெல்லியில் நாளுக்கு நாள் சுற்றுச்சூழல் மாசடைந்து வரும் நிலையில், பசுமை தீர்ப்பாயத்தில் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன், 10 ஆண்டுகள் பயன்படுத்தப்பட்ட டீசல் வாகனங்களுக்கு தடை விதித்து பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டிருந்தது. தற்போது மேலும் ஒரு அதிரடி உத்தரவை பசுமை தீர்ப்பாயம் பிறப்பித்துள்ளது. டெல்லி மாநிலம் மற்றும் தேசிய தலைநகர பகுதிகளில் திறந்த வெளியில் குப்பை, இலை, பிளாஸ்டிக் மற்றும் ரப்பர் ஆகியவற்றை தீ வைத்து எரித்தால் ரூ. 5000 அபராதம் விதிக்கப்படும் என்று பசுமை தீர்ப்பாயம் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment