"ஒரு துவக்கப்பள்ளியின் முடிவு' - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, April 29, 2015

"ஒரு துவக்கப்பள்ளியின் முடிவு'

1990 காலகட்டங்களில் உலக வங்கியின் நிர்பந்தத்தால் புதிய பொருளாதாரக் கொள்கையை மத்திய, மாநில அரசுகள் அமல்படுத்தியதால், கல்வியில் தனியார்மயம் அனுமதிக்கப்பட்டு பின்பு தீவிரப்படுத்தப்பட்டது. இதன்விளைவு, தனியார் முதலாளிகளும், நிறுவனங்களும் லாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு பள்ளி, கல்லூரிகளைத் துவங்கினர்.

குழந்தைகளின் கூச்சல்களும், ஆரவாரமும் கேட்டுக்கொண்டிருந்த ராமகோவிந்தன்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி சத்தமில்லாமல் ஒரு நாள் மயானமாகிவிட்டது. ஆம், 52 ஆண்டுகளாக நாகை மாவட் டம் வேதாரண்யம் தகட்டூர் அருகிலிலுள்ள ராமகோவிந்தன்காட்டில் செயல்பட்டு வந்த இப்பள்ளியில் 200க்கும் மேற்பட்ட குழந்தைகள் கல்வி பயின்றனர். 5 ஆசிரியர்களும் பணியாற்றி வந்தனர். இப்பள்ளி ஏராளமான அறிஞர்களையும், பல்துறை வல்லுநர்களையும் உருவாக்கிய புகழைகொண்டது. கடந்த காலத்தில் அரசின் அனைத்து நலத் திட்டங்களும், சலுகைகளும் மிகச்சிறப்பாக செயல்படுத்தப்பட் டுள்ளன. ஆனாலும் ஆண்டுக்காண்டு மாணவர் சேர்க்கை குறைந்து கொண்டு வந்துள்ளது. மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்களும் வேறு பள்ளிக்கு இட மாற்றப்பட்டனர்.
இதன் தொடர்ச்சியாக கடந்த கல்வியாண்டில் ஒரு மாணவர் கூட ஒன்றாம் வகுப்பில் சேரவில்லை. 5ம் வகுப்பில் 3 மாணவர்களும், 2ம் வகுப்பில் ஒரு மாணவரும் மட்டுமே படித்து வந்தனர். இதில் ஐந்தாம் வகுப்பில் படித்த மூன்று மாணவரும் தேர்ச்சி பெற்று ஆறாம் வகுப்பிற்கு சென்றனர். இரண்டாம் வகுப்பில் படித்து வந்த முருகபூபதி தேர்ச்சி பெற்று மூன்றாம் வகுப்பிற்கு சென் றார். கடைசியாக, இரண்டு ஆசிரியர்களும் சேர்ந்து 1 மாணவரான முருகபூபதிக்கு வகுப்பெடுத்து வந்தனர். அதற்கும் விரைவில் ஆபத்து வந்தது. இப்பள்ளியில் தனியாக தன் குழந்தை பயில்வதை விரும் பாத பெற்றோர் முருகபூபதியை வேறு பள்ளிக்கு மாற்றிவிட்டனர்.

இதனால் மாணவர்களே இல்லாத பள்ளியாக மாறியது. இப்பள்ளியை ஆய்வு செய்த அதிகாரிகள், இரு ஆசிரியர்களையும் வேறு பள்ளிக்கு மாற்றிவிட்டு அப்பள்ளிக்கு மூடுவிழா நடத்தினர். இதுவரை குழந்தைகளின் இடை விடாத இரைச்சலைக் கேட்டுக் கொண்டிருந்த வகுப்பறைகளும் ஓடி விளை யாடிய பள்ளி வளாகமும் மயான அமைதி யாகிவிட்டது. நாகை மாவட்டத்திலுள்ள ஒரு ராம கோவிந்தன்காடு பள்ளி மட்டுமல்ல, தமிழகம் முழுவதும் கடந்த சில ஆண்டுகளில் மட்டும் சுமார் 1100 அரசு பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டுள்ளன. மேலும்5,7,10,20 என மிகக்குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களை கொண்டுள்ள 2000 த்திற்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகள் விரைவில் மூடப்படும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளன.

அரசு பள்ளிகள் மூடப்படுவதற்கு யார் காரணம்?
நாடு விடுதலையடைந்த பிறகு கல்வியை பரவலாக்கும் நோக்கில் பட்டி தொட்டியெங்கும் அரசுப் பள்ளிகள் தொடங்கப்பட்டன. சமூக நோக்கில் சில தனியார் பள்ளிகளும் அரசின் மானியம் பெற்று இயங்கின. ஆங்கில ஆட்சிக் காலத்திலேயே உள்ளாட்சி அமைப்புகளின் கீழும், மாவட்டக் கழக சட்டம் 1920 ன் படியும் (னுஐளுகூசுஐஊகூ க்ஷடீஹசுனுளு) மாவட்டக் கழகத்தின் கீழும் இயங்கிய பள்ளிகள் அனைத்தும் 1970ல் அரசு கல்வித்துறையின் நேரடி நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டன. மெட்ரிக் பள்ளிகள் மட்டும் பல் கலைக்கழக பொறுப்பில் இருந்தன.

அவற்றிற்கான விதிகள் மாநில வாரியப் பள்ளிகளுக்கு விதிக்கப்பட்டதை விட மிகக் கடுமையானவையாக இருந்தன. ஆங்கில வழி கட்டணப் பள்ளிகளாக மேட்டுக்குடி மக்களுக்கு பயன்படுவை யாக அவை விளங்கின. 1976ம் ஆண்டில் பல்கலைக்கழகம் பள்ளிக்கல்வி அளிக்கும் பொறுப்பிலிருந்து விலக முடிவெடுத்தது.1978ம் ஆண்டிற்குப் பின்னர் மெட்ரிக் தேர்வுகளை நடத்த மாட்டோம் என அறி வித்தது. மாநில அல்லது நடுவண் வாரியத்தோடு இணைத்துக் கொள்ள மெட்ரிக் பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. ஆனால், அப்பள்ளிகளுக்கு தனிவாரியம் அமைத்ததும் வாரியத்தின் விதிமுறை களை அப்பள்ளிகளே உருவாக்க அனுமதித்ததும் பல்கலைக்கழக விதிமுறை களை நீர்த்துப் போகச் செய்து விதிகள் உருவாக்கிய போது அவற்றை அப் படியே அங்கீகரித்ததும் அரசு செய்த மாபெரும் தவறுகள்.

அதன் விளைவு 34 மெட்ரிக் பள்ளிகளில் 1 சதவீதத்திற்கு குறைவாகவே பயின்ற மாணவர்கள் என்ற நிலை மாறி இன்று 4000த்திற்கும் மேற்பட்ட மெட்ரிக் பள்ளிகள் மற்றும் சுயநிதி தனியார் பள்ளிகள் என 11,462 பள்ளிகளாக பல்கிப் பெருகியுள்ளன; இப்பள்ளி களில் மட்டும் தற்போது 45,96,909 மாண வர்கள் பயின்று வருகின்றனர்.

சிவப்புக் கம்பளம் விரித்த ஆட்சியாளர்கள்
1990 காலகட்டங்களில் உலக வங்கி யின் நிர்பந்தத்தால் புதிய பொருளாதாரக் கொள்கையை மத்திய, மாநில அரசுகள் அமல்படுத்தியதால், கல்வியில் தனியார் மயம் அனுமதிக்கப்பட்டு பின்பு தீவிரப் படுத்தப்பட்டது. இதன்விளைவு, தனியார் முதலாளிகளும், நிறுவனங்களும் லாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு பள்ளி, கல்லூரிகளைத் துவங்கினர். தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தி லிருந்த திமுக, அதிமுக அரசுகள் மத்திய அரசு கொண்டு வந்த முதலாளி களுக்குச் சாதகமான பொருளாதாரக் கொள்கைக்கு ச

No comments:

Post a Comment