2025-ல் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும்: ஆய்வறிக்கையில் தகவல் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, May 26, 2015

2025-ல் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும்: ஆய்வறிக்கையில் தகவல்

2025-ம் ஆண்டில் இந்தியா, தண்ணீர் பற்றாக்குறை நாடாக இருக்கும் என்று ஆய்வறிக்கை ஒன்றில் தகவல் வெளியாகி யுள்ளது.

தண்ணீர் தொழில் துறையில் முன்னணி ஆலோசனை நிறுவன மான ‘இ.ஏ. வாட்டர்’ மேற் கொண்ட ஆய்வில் இத்தகவல் தெரியவந்துள்ளது.

“இந்தியாவில் 2025-ம் ஆண்டில் அனைத்து நீராதாரங்களின் அளிப்பை காட்டிலும் தேவை அதிகமாக இருக்கும். குடும்ப வருவாய் உயர்வு, தொழில் துறை மற்றும் சேவைத் துறை யின் பங்களிப்பு அதிகரிப்பு ஆகியவற்றால் தண்ணீரின் தேவையும் குறிப்பிடத்தகுந்த அளவு அதிகரிக்கும்” என்று இந்த ஆய்வறிக்கையில் கூறப் பட்டுள்ளது. நாட்டின் 70 சதவீத நீர்ப்பாசனம் மற்றும் 80 சதவீத வீட்டு உபயோகத்துக்கு நிலத்தடி நீர் பயன்படுத்தப்படுகிறது. இதனால் நிலத்தடி நீர் வேகமாக தீர்ந்து வருகிறது.

இந்நிலையில் இந்திய தண்ணீர் தொழில் துறையில் கனடா, இஸ்ரேல், ஜெர்மனி, இத்தாலி, அமெரிக்கா, சீனா, பெல்ஜியம் ஆகிய நாடுகள் 1,300 கோடி டாலர் (இந்திய ரூபாயில் சுமார் 82,543 கோடி) மதிப்பில் மிகப்பெரிய முதலீடுட்டுக்கான வாய்ப்புகளை எதிர்நோக்கி காத்துள்ளன. இத்துறை அடுத்த 3 ஆண்டுகளில் ரூ.18 ஆயிரம் கோடி முதலீடுகளை ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குடிநீர் சப்ளை மற்றும் கழிவுநீர் மேலாண்மைக்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத் துவதில் இந்தியா மிகப்பெரிய வாய்ப்புகளை அளிக்கும்.

தொழில் துறையிலும் கழிவு நீர் சுழற்சி மற்றும் சுத்திகரிப்புக்கான வசதிகளை ஏற்படுத்துவதில் 2020-ம் ஆண்டு வரை வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. கங்கை தூய்மைப்படுத்தும் திட்டம், ஸ்மார்ட் நகரங்கள், தூய்மை இந்தியா இயக்கம் போன்ற வற்றில் மோடியின் அரசு முதலீடு செய்யவுள்ள நிலையில், இவற்றின் மூலம் தண்ணீர் தொழில் துறையில் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment