ஆய்வக உதவியாளர்கள் தேர்வு நாளை நடக்கிறது: நுழைவு சீட்டு இல்லாமல் வருபவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படமாட்டார்கள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தகவல் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Saturday, May 30, 2015

ஆய்வக உதவியாளர்கள் தேர்வு நாளை நடக்கிறது: நுழைவு சீட்டு இல்லாமல் வருபவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படமாட்டார்கள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தகவல்

ஆய்வக உதவியாளர்கள் தேர்வுக்கு நுழைவு சீட்டு இல்லாமல் வருபவர் களை தேர்வு எழுத அனு மதிக்கப்படமாட் டார்கள் எனமாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப் பதாவது:–விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள ஆய்வக உதவியாளர் பணிக்கான தேர்வு 31–ந்தேதி (நாளை) நடை பெறஉள்ளது.
இதில்
தேர்வாளர்கள் கடை பிடிக்க வேண்டிய நடைமுறைகள் வருமாறு:–25.5.2015 முதல் ஆய்வக உதவியாளர் தேர்வுக்கான நுழைவுச் சீட்டுகள்இணைய தளத்தில் வெளி யிடப்பட்டு உள்ளன. இதுவரை நுழைவு சீட்டினை பதிவிறக்கம் செய் யாத தேர்வர்கள் உடனடியாக பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். நுழைவு சீட்டினை பதிவிறக்கம் செய்வதில்ஏதே னும் நடைமுறை சிக்கல்கள் இருப்பின் தேர்வர்கள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள முதன்மை கல்வி அலுவலகத்தை தொடர்பு கொள்ள வேண்டும்.
அனுமதி இல்லை....
நுழைவு சீட்டுகள் இல்லா மல் வரும் தேர்வர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படமாட்டார்கள். மாற்றுத்திறனாளி தேர்வர்கள் தங்களுக்க வினாத் தாளை படித்து காண்பிக்கவும், விடைகளை எழுதவும்,செல் வதை எழுதுபவர் உதவி தேவைப்பட்டால் சம்மந்தப் பட்ட முதன்மை கல்விஅலுவ லரை உடனடியாக தொடர் கொண்டு அதற்கான ஆட்களைநியமனம் செய்து பெற்றுக்கொள்ளலாம்.
செல்போன்
தேர்வுக்கு வரும் தேர்வர்கள் கண்டிப்பாக தேர்வு மைய வளாகத்திற்குள் செல்போன்மற்றும் கால்குலேட்டர் கொண்டு செல்ல கூடாது. தேர்வு மையத்திற்கு தேர்வர் களைதவிர வெளி நபர்கள் கண்டிப்பாக நுழைய கூடாது. தேர்வர்கள் நீலம் அல்லது கருப்பு நில பந்து முனை பேனாவை மட்டுமே பயன்படுத்தவேண் டும். தேர்வர்கள் துண்டு சீட்டுக்களை (பிட்) கண்டிப் பாக தேர்வு மையத்திற்குள் கொண்டு செல்ல கூடாது.இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment