தூசி பறக்காத கரும்பலகை துடைப்பான் உருவாக்கும் செயல்முறை - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Saturday, May 30, 2015

தூசி பறக்காத கரும்பலகை துடைப்பான் உருவாக்கும் செயல்முறை

பள்ளி மாணவர்கள் இணைந்து எளிமையான தூசி பறக்காத  கரும்பலகை துடைப்பானை   உருவாக்கியுள்ளனர். வலங்கைமான் ஒன்றியம் தென்குவளவேலி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள் சிலர் தங்கள் அறிவியல் ஆசிரியர் திரு. இராமமூர்த்தியுடன் இணைந்து இதனை உருவாக்கியுள்ளனர்.
இதனை உருவாக்கும் எளிய செயல்முறை இதோ!பழைய சணல் சாக்கு ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். அதிலிருந்து சிறிய செவ்வக வடிவமாக ஒரு துண்டு நறுக்கிக் கொள்ளுங்கள்.அதனை சோப்புப் பெட்டி அல்லது வேறு ஏதேனும் பெட்டியின் வாய்ப்பக்கத்தில் நன்றாக தொய்வல் இல்லாமல் ஒட்டிக் கொள்ளுங்கள்.அவ்வளவு தான் . Dust Free Duster தயாராகிவிட்டது. இதனை வைத்து கரும்பலகையை அழிக்கும் போது பெரும்பாலான துகள்கள் சணல் சாக்கின் சிறிய துளைகள் வழியாக உள்ளே சென்று சோப்புப் பெட்டிக்குள் சேகரமாகின்றன. இந்த சுண்ணாம்புத் துகள்களை பின்னர் எளிதாக சோப்புப் பெட்டியினைத் திறந்து சேகரித்துக் கொள்ளலாம். செய்து பார்த்து விட்டு கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்களேன்.
Dust and Pollution1 - YouTube - "Dust and Pollution1 - YouTube" https://m.youtube.com/watch?v=nh67ohNQm4g&feature=youtu.be ——by @UC Browser

No comments:

Post a Comment