வக்கிர கும்பலின் சேட்டை தொடர்கிறது: பேஸ்புக்–வாட்ஸ்அப்பில் கல்லூரி மாணவிகள் பற்றி அவதூறு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Friday, May 29, 2015

வக்கிர கும்பலின் சேட்டை தொடர்கிறது: பேஸ்புக்–வாட்ஸ்அப்பில் கல்லூரி மாணவிகள் பற்றி அவதூறு


தகவல் தொழில் நுட்பத்தின் அசுர வளர்ச்சி இன்று விண்ணை முட்டி நிற்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது.ஒரு காலத்தில் பேசுவதற்கும் குறுஞ்செய்திகள் அனுப்புவதற்கு மட்டுமே பயன்பட்டு வந்த செல்போன்களில் இன்று எல்லாம் கிடைக்கிறது. செல்போனில் நெட்பேக்கிங் வசதி இருந்தால் போதும்.இருந்த இடத்தில் இருந்தே வங்கிகளின் பணம் செலுத்த முடிகிறது. என்னென்ன பில் கட்ட வேண்டி இருக்கிறதோ அத்தனையையும் செல்போன் வழியாகவே செலுத்தவும் முடிகிறது.இதனால் நேரம்... அலைச்சல்... எல்லாமே மிச்சமாகிறது. அதிலும் இன்று செல்போனில் ‘வாட்ஸ்அப்’ வசதி வந்த பின்னர் இளைஞர்கள், இளம் பெண்கள் பலர் தங்களது நேரத்தையெல்லாம் அதிலேயே செலவிட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஒரு சிலர் காலையில் எழுந்ததும் கண் விழிப்பது வாட்ஸ்அப் முகத்தில்தான்.இதில் அறிவுப்பூர்வமான பல தகவல்களும் பரிமாறப்படுகின்றன. மூளைக்கு வேலை கொடுக்கும் விளையாட்டுகளும் வாட்ஸ்அப்பில் அனுப்பப்படுகின்றன. உலகின் எங்கோ ஒரு மூலையில் நடக்கும் நிகழ்வுகளை அடுத்த நொடியில் எங்கிருந்தாலும் நாம் பார்த்து விட முடிகிறது.இதே போல போஸ்புக் என்று அழைக்கப்படும் முகநூல் பக்கங்களிலும் நமக்கு பிடித்தமான விஷயங்களை நொடிக்கு நொடி பரிமாறிக்கொள்ள முடிகிறது.வாட்ஸ்அப்பை போலவே போஸ்புக்கிலும் பலர் நேரம் போவது தெரியாமல் சாட்டிங் செய்து கொண்டிருக்கிறார்கள்.இப்படி, இன்று இளசுகள் முதல் பல்லு போன முதியவர்கள் வரை அத்தனை பேரையும் கட்டிப்போட்டு வைத்திருக்கும் பேஸ்புக்– வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளங்கள் இளம்பெண்களுக்கு ஆபத்தானதாகவே இருந்து வருகிறது.இதனால் நாள்தோறும் பெண்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.குறிப்பாக கல்லூரி மாணவிகள் பலரை பேஸ்புக் சிக்கலில் சிக்க வைத்து விடுகிறது. குறிப்பிட்ட பெண்ணின் பேஸ்புக்கில் இருந்து அவர் சாட்டிங் செய்வது போல பேசும் வக்கிர வாலிபர்கள் சிலர், அறுவறுக்கத்தக்க வகையிலான போட்டோக்களையும் அனுப்பி வைக்கிறார்கள்.சம்பந்தப்பட்ட பெண்ணின் தோழிகள் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்கள்களுக்கு இத்தகைய போட்டோக்கள் அனுப்பப்படுவதால் பாதிக்கப்படும் பெண்கள் பலர் மிகுந்த மன உளைச்சலுக்குள்ளாகிறார்கள்.இது போன்று பாதிப்புக்குள்ளாகும் பெண்கள் கமிஷனர் அலுவலகத்தில் தொடர்ந்து புகார் செய்து கொண்டே இருக்கிறார்கள். ஒவ்வொரு மாதமும் சுமார் 30 பெண்கள் வரை புகார் செய்கிறார்கள்.இப்படி பெண்களைப் பற்றி அவதூறு பரப்பும் ஆண்கள் பெரும்பாலும் அவர்களுக்கு தெரிந்தவர்களாக இருப்பது தான் வேதனையின் உச்சக்கட்டமாக இருந்து வருகிறது. இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் நிலையிலும் பல பெண்கள் மனமிறங்கி மேல் நடவடிக்கை வேண்டாம் என்று எழுதிக்கொடுத்துவிட்டு சென்று விடுகிறார்கள்.இதுபோன்று இணைய தளங்களில் ஒருவரை பற்றி அவதூறு பரப்புவர்கள் மீது தகவல் தொழில்நுட்ப சட்டம் 66ஏ பாய்ந்து வந்தது. இதனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில் சமீபத்தில் அதிரடி தீர்ப்பு வழங்கப்பட்டது.கருத்து சுதந்திரத்துக்கு எதிரானது இச்சட்டப்பிரிவு என்று கூறி அதனை நீக்கி கோர்ட்டு உத்தரவிட்டது. இச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவர்களுக்கு 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கவும் வாய்ப்புகள் இருந்தன.தற்போது இச்சட்டப் பிரிவு நீக்கப்பட்டுவிட்டதால், அதற்கு பதில், தகவல் தொழில் நுட்ப சட்டம் 67–ன் கீழ் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.இது அதனைப் போன்று கடுமையான சட்டபிரிவு அல்ல என்பது வக்கிர இளைஞர்களுக்கு சாதகமாக போய் விடுகிறது. குறிப்பிட்ட அசிங்கமான வார்த்தைகள் இருந்தால் மட்டுமே இச்சட்டப்பிரிவின் கீழ் போலீசாரால் நடவடிக்கை எடுக்க முடியும்.இப்படி பேஸ்புக்கில் அவதூறு பரப்புபவர்கள் எளிதில் சிக்கிக் கொள்ளும் நிலையில் வாட்ஸ்அப் மூலம் அறுவறுக்கதக்க தகவல்களை அனுப்புவர்களை கண்டு பிடிக்க முடியாது என்கிறார்கள் போலீசார்.இதனால் சமீபகாலமாகவே ஏதாவது ஒரு பெண்ணின் போட்டோவை போட்டு அவர்களை பற்றி இல்லாத ஒன்றை பரப்புவதையே ஒரு கும்பல் வேலையாக செய்து கொண்டிருக்கிறது.பள்ளி மாணவனுடன் ஓடிப்போன ஆசிரியர் இவர்தான் என்று சமீபத்தில் யாரோ ஒரு பெண்ணின் போட்டோ பரப்பப்பட்டது.சென்னை போலீஸ் உதவி கமிஷனர் ஒருவர் ஆபாச ஆடியோ விவகாரத்தில் சிக்கிய போதும், இவர்தான் அந்த பெண் போலீஸ் என்று கூறி சுமார் 5 பெண்களின் அழகிய போட்டோக்களும் பரப்பப்பட்டன.திருமண கோலத்தில் இருக்கும் பெண் ஒருவர் பள்ளி மாணவன் போன்ற தோற்றத்தில் இருக்கும் வாலிபர் ஒருவரின் கையை பிடித்துக் கொண்டு கோவிலை சுற்றி வரும் போட்டோவை போட்டு ஆசிரியையை திருமணம் செய்த 10–ம் வகுப்பு மாணவன் என்று பரபரப்பான அவதூறு செய்தியும் சமீபத்தில் பரப்பப்பட்டது.2 நாட்களுக்கு பின்னர் 2 பேரும் அக்காள்–தம்பி, தகவலுக்கு வருந்துகிறேன் என்கிற மறுப்பு தகவலும் மின்னல் வேகத்தில் பரவியது.இதனால் வெறுத்துப்போன ‘வாட்ஸ்அப்’ நண்பர் சமீபத்தில் ஒரு பெண்ணின் போட்டாவை போட்டு ‘வாய்ஸ் ரெக்கார்டர்’ ஒன்றையும் அனுப்பி இருந்தார்.அதனை கேளுங்கள்..‘

No comments:

Post a Comment