கோவையில் ஆரவாரமின்றி ஓர் தாவரவியல் பூங்கா! : பத்தே ரூபாயில் மலர் காட்சி - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Saturday, May 23, 2015

கோவையில் ஆரவாரமின்றி ஓர் தாவரவியல் பூங்கா! : பத்தே ரூபாயில் மலர் காட்சி

பூங்காவில் மருத்துவத் தாவரங்கள், அலங்காரத் தாவரங்கள், மூலிகைத்தாவரங்கள், பல்லாண்டுத்தாவரங்கள், உணவுத்தாவரங்கள் என்று வகைப்படுத்தியுள் ளனர். கட்டுமானத்துக்கு பயன்படும் ஈட்டி, வேங்கை, தேக்கு, பில்லமருது, வெண்தேக்கு உள்ளிட்ட மரங்களும், நிழல்பரப்பும் ஆலமரம், மழையை பொழிவிக்கும் மரங்கள், ஆக்சிஜனை அதிகம் வெளியிடும் மரங்கள், கார்பன் டை ஆக்சைடு மற்றும் கார்பன்மோனாக்சைடு அதிகம் உள்ளிழுக்கும் மரங்களை பட்டியலிட்டு வைத்துள்ளனர். வறட்சியை தாங்கி, அதிக அளவு நீர்சத்தை கொண்டுள்ள மரங்கள் என்று, 200 க்கும் மேற்பட்ட மரங்களை பார்க்கலாம். அலங்காரவகைச்செடியில், குரோட்டன்ஸ் என்ற பெயரில் பல ரகங்கள் உள்ளன. அதில் மட்டும், 70 ரகங்களிலான செடிகள் உள்ளன.

தாவரவியல் பூங்கா என்பதை உணர்த்துவதற்காக, பச்சைபசேல் என்று காணப்படும் புல்வெளிகள், அதற்கு பாதுகாப்பாக முயலைப்போன்ற காதுகளை கொண்ட முயல்காதுச்செடிகள், மூலிகையில் முதல் இடம் பிடிக்கும் தொட்டால் சிணுங்கி, சர்க்கரை நோயை குணப்படுத்தும் சிறியாநங்கை, பெரியாநங்கை மற்றும் முதலுதவி சிகிச்சைக்கான மருத்துவச்செடிகளை பார்க்கலாம்.

மருத்துவத்துக்கு பயன்படும் 30 வகையான கீரைகளை பார்க்கலாம், மஞ்சள், பச்சை, வெள்ளை, சிகப்பு, ஆரஞ்சு என்று வானவில்லின் ஏழு நிறங்களில் மலர்களை கொடுக்கும் மலர்செடிகளை பார்த்து ரசிக்கலாம். இவை அத்தனைக்கும், பத்தே ரூபாய் கட்டணம். காலை 9:00 முதல், 11:00 மணி வரையும், மதியம் 2:00 முதல் 5:00 மணி வரையும் அனுமதிக்கின்றனர். ஊட்டியில் மூன்று நாட்கள் நடக்கும் மலர்கண்காட்சியை காண முட்டிமோதி, கடும் சிரமத்துக்குப்பின் செல்கிறோம். ஆனால், கோவையில் ஆரவாரமின்றி உள்ள தாவரவியல் பூங்காவுக்கு, 10 ரூபாய் கட்டணம் கொடுத்து, எளிதாக பார்க்கலாம். இங்கு குழந்தைகளை அழைத்துச்செல்லும் போது, இளைய தலைமுறையினருக்கு தாவரவியலை பற்றிய அறிவு தானாக வந்து விடும்.

No comments:

Post a Comment