SSA - தொகுப்பு ஊதியத்தில் கம்ப்யூட்டர் ஆபரேட்டர்கள் நியமனம் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, May 19, 2015

SSA - தொகுப்பு ஊதியத்தில் கம்ப்யூட்டர் ஆபரேட்டர்கள் நியமனம்

அனைவருக்கும் கல்வி இயக்கத்தில், தொகுப்பு ஊதிய அடிப்படையில், கம்ப்யூட்டர் ஆபரேட்டர் பணியிடங்களை, நிரப்பிக் கொள்ளலாம்' என, உத்தரவிடப்பட்டு உள்ளது. இது தொடர்பாக, அனைவருக்கும் கல்வி மாநில திட்ட ஒருங்கிணைப்பாளர் பூஜாகுல்கர்னி, அனைத்து மாவட்ட கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர்கள், தங்களது கட்டுப்பாட்டில் உள்ள அலுவலகங்களில், காலியாக உள்ள கம்ப்யூட்டர் ஆபரேட்டர் பணியிடங்களில், கம்ப்யூட்டர் விவரம் பதிவாளரை, தொகுப்பு ஊதியத்தில் நியமனம் செய்துக் கொள்ளலாம். கம்ப்யூட்டர் ஆபரேட்டர் பணியிடம், முற்றிலும், தற்காலிகமாக நேரடி நியமனம் செய்ய வேண்டும். இந்த பணி நியமனத்துக்கு, 1.6.2015ம் தேதி, 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என, அறிவுறுத்தப்படுகிறது.

அந்தந்த மாவட்டங்களில் உள்ள, காலி பணியிடங்களுக்கு ஏற்ப, பணியாளர்களை நியமித்துக் கொள்ளவும் அனுமதி அளிக்கப்படுகிறது.இவ்வாறு, சுற்றறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

350 பேருக்கு வேலைவாய்ப்பு
அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ், தமிழகம் முழுவதும், 350க்கும் மேற்பட்டோர் நியமிக்கப்படுவர் என, தெரிகிறது. இதற்கான பணிகளை, அந்தந்த மாவட்ட கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

நடப்பு, 2015 - 2016ம் கல்வியாண்டில், தொகுப்பு ஊதியத்தில் பணியமர்த்தப்படும், கம்ப்யூட்டர் ஆபரேட்டர் பணிக்கு, பிளஸ் 2 தேர்ச்சிப் பெற்று, தட்டச்சு ஆங்கிலம் மற்றும் தமிழில், கீழ்நிலையில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.

தகுதியுடைய ஆண், பெண் பணிநாடுநர்கள், தங்களின் விண்ணப்பப் படிவத்தை, கல்விச் சான்றிதழ் நகல்களுடன், வரும் 25ம் தேதிக்குள், அந்தந்த மாவட்டத்திலுள்ள, அனைவருக்கும் கல்வி இயக்க திட்ட ஒருங்கிணைப்பாளரிடம் விண்ணப்பிக்கலாம் எனவும், அறிவிக்கப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment