கல்வித்துறைக்கு ஒதுக்கப்படும் 80% பணத்தை ஆசிரியர்களுக்காக மட்டுமே செலவு செய்கிறது இந்தியா! - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Saturday, May 23, 2015

கல்வித்துறைக்கு ஒதுக்கப்படும் 80% பணத்தை ஆசிரியர்களுக்காக மட்டுமே செலவு செய்கிறது இந்தியா!

டெல்லி: மத்திய அரசு கல்வித் துறைக்கும் செலவீடும் 80 சதவீத பணம், ஆசிரியர்களின் சம்பளம், பயிற்சிக்காக மட்டுமே செலவீடப்படுவதாக இந்தியா ஸ்பென்டு தெரிவித்துள்ளது.

6 மாநிலங்களின் பள்ளிக் கல்வித் துறையில் செய்த ஆய்வில் இந்தியா ஸ்பென்டு இந்தத் தகவலை அளித்துள்ளது.
1) கல்வித் தரம்
கல்வித்துறைக்கு ஒதுக்கப்படும் 80 சதவீத தொகையை ஆசிரியர்களுக்காக மட்டும் செலவு செய்து வரும் இந்தியாவில், இன்னமும் தரமான பள்ளிக்கல்வி பல மாநிலங்களில் கிடைக்கவில்லை என்பது தான் இன்றைய இந்தியாவின் உண்மை நிலை.
2) பிரிக்ஸ் நாடுகள்
மேலும் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்பிபரிக்கா ஆகிய கூட்டணியில் உருவான பிரிக்ஸ் நாடுகள் கூட்டணயில், இந்தியாவில் ஆசிரியர்கள் பற்றாக்குறையாக அதிகளவில் உள்ளதாகவும் இந்த ஆய்வுத் தெரிவித்துள்ளது.

மேலும் இந்தியாவை விடவும் ஏழை நாடுகள், தன் மக்களுக்குச் சிறப்பான கல்வியை அளித்து வருவதாகும் இந்த ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கிறது.
3) பைசா 2015
இந்தியாவில் கல்விக்காக ஒதுக்கப்படும் ஒட்டுமொத்த தொகையில் ஆசிரியர்களுக்கு 80 சதவீதமும், குழந்தைகளுக்கு 5 சதவீதமும், நிர்வாகத்திற்கு 5 சதவீதமும், பள்ளிகளுக்கு 5 சதவீத தொகை செலவிடப்படுவதாகப் பைசா 2015 ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது.
4) 94 பில்லியன் டாலர்
கடந்த 10 வருடத்தில் ஆசிரியர்களுக்கு மட்டும் இந்திய அரசு 94 பில்லியன் டாலர் ஆதாவது 5,86,085 கோடி ரூபாய் செலவு செய்துள்ளது.
இவ்வளவும் பணம் செலவு செய்தாலும் இந்தியாவில் பல பகுதிகளில் கல்வித்துறை முன்னேற்றம் அடைவில்லை.
5) மகாராஷ்டிரா
ஆசிரியர் பயிற்சிக்காக மத்திய அரசு பல ஆயிரம் கோடிகள் செலவு செய்து வருகிறது. இந்நிலையிலும் மகாராஷ்டிரா மாநிலத்தில் 90 சதவீத ஆசிரியர்கள் தகுதி தேர்வில் தேர்வாகவில்லை என்பது தான் வருத்தம்.
6) படிக்காதவர்கள்
இந்தியா ஸ்பென்டு நிறுவனத்தின் ஆய்வின் முடிவில் இந்தியாவில் இன்னும் 282 மில்லியன் குடிமக்கள் படிப்பறிவு இல்லாதவர்களாக உள்ளனர்.
7) உயர் கல்வி
மேலும் பள்ளியில் படித்து வரும் குழந்தைகள் 50 சதவீதம் பேர் மட்டுமே உயர் கல்வி அல்லது கல்லூரிக்குச் செல்வதாகப் புள்ளி விபரம் கூறுகிறது.

No comments:

Post a Comment