ப்ளஸ் 1 பாடப்புத்தகங்களுக்கு தட்டுப்பாடு:அலைக்கழிக்கப்படுவதால் கடும் அவதி - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Friday, June 19, 2015

ப்ளஸ் 1 பாடப்புத்தகங்களுக்கு தட்டுப்பாடு:அலைக்கழிக்கப்படுவதால் கடும் அவதி

ப்ளஸ் 1 பாடப்புத்தகங்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பள்ளி நிர்வாகம், புத்தகம் வாங்கி வர வற்புறுத்துவதால், தனியார் பள்ளி மாணவ, மாணவியர் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.தமிழகத்தில், ஜூன் 1ம் தேதி பள்ளி திறந்து, வகுப்பு துவக்கப்பட்டது. ப்ளஸ் 1 சேர்க்கை முடிந்து, அவர்களுக்கும், ஜூன், 15ம் தேதி வகுப்புகள் துவங்கியது. அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில், விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டது. தனியார் பள்ளிகளில், பெரும்பாலான
பள்ளிகள், மாணவர்களையே, புத்தகங்களை வாங்கி வர அறிவுறுத்துகின்றன.ப்ளஸ் 1 பாடப்புத்தகங்கள், சேலம் மாவட்டத்தில் எங்கும் விற்பனைக்கு கிடைக்கவில்லை. பழைய புத்தக கடைகளில் விற்பனையாகும், பயன்படுத்திய புத்தகங்கள் கூட, இரு மடங்கு விலையும், கடும் கிராக்கியும் உள்ளது. இதனால், மாணவ, மாணவியர் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.
இதுகுறித்து பெற்றோர் சிலர் கூறியதாவது:தமிழக பாடநூல் கழகத்திலிருந்து, புத்தகங்கள் கிடைக்கப்பெறவில்லை. மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் ரெய்டு நடத்தியதால், விலையில்லா பாடப்புத்தகங்கள், விற்பனை செய்வதையும் நிறுத்திவிட்டனர். இதனால், தினமும் நூற்றுக்கணக்கானோர், ப்ளஸ் 1 பாடப்புத்தகத்தை கேட்டுவிட்டு, இல்லாமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். பழைய புத்தக கடைகளில், கடந்த ஆண்டு பயன்படுத்திய புத்தகத்தை, இரு மடங்கு விலை அதிகமாக விற்கின்றனர். பெற்றோரும் வேறு வழியில்லாமல், அவற்றை பெற்றுச்செல்ல வேண்டிய கட்டாயம் நிலவுகிறது.
பொதுவாக தனியார் பள்ளிகளில், ஆகஸ்ட் மாதத்துக்குள், ப்ளஸ் 1 பாடத்தை முடித்துவிட வேண்டும் என வகுப்பு துவங்கியதில் இருந்தே அவசரம் காட்டி வருவதால், பாடப்புத்தகத்தை வாங்கிவர தினமும் நச்சரிக்கின்றனர். இத்தட்டுப்பாட்டை போக்க, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment