பள்ளி வேன்கள், ஆட்டோக்கள்...விதிமீறல்:மாணவர்கள் ஆபத்தான பயணம் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Saturday, June 20, 2015

பள்ளி வேன்கள், ஆட்டோக்கள்...விதிமீறல்:மாணவர்கள் ஆபத்தான பயணம்

அரசு உத்தரவுகளை பின்பற்றாமல், விதிகளை மீறி செயல்படும் பள்ளி வாகனங்களில் மாணவ, மாணவிகள் தினமும் ஆபத்தான பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
னமும் காலை, மாலை நேரங்களில் பள்ளி வாகனங்கள் இயக்கப்படுகின்றன. ஒரு சில தனியார் பள்ளி வாகனங்களில் அளவுக்கு அதிகமாக மாணவர்களை ஏற்றிச் செல்கின்றனர். பள்ளி வாகனங்களை எளிதில் அடையாளம் காணும் வகையில், மஞ்சள் நிற பெயின்ட் பூசி, "பள்ளி வாகனம்' என குறிப்பிட்டிருக்க வேண்டும். பள்ளி வாகனத்தில் வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்தி இருக்க வேண்டும். எந்த வழக்கும் இல்லை என்ற போலீசாரின் சான்றிதழ் பெற்ற ஓட்டுனரை பணி யமர்த்த வேண்டும், என பல்வேறு விதிமுறைகளை அரசு பிறப்பித்துள்ளது.
இத்தகைய வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய போலீசார் கண்டும் காணாமல் இருந்து வருகின்றனர். வீதிகளை மீறி செயல்படும் பள்ளி வாகனங்களால் தங்களது குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படுமோ என்ற அச்சம் பல பெற்றோர்கள் மத்தியில் உள்ளது. அரசு விதிமுறைகளை பின்பற்றாத பள்ளி வாகனங்கள் மீது அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment