இன்று முதல் தட்கல் டிக்கெட் நேரத்தில் மாற்றம் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, June 15, 2015

இன்று முதல் தட்கல் டிக்கெட் நேரத்தில் மாற்றம்

ஜூன் 15–தட்கல் டிக்கெட் எடுக்கும் நேரம் இன்று முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுவரையில் பயணம் செய்யக்கூடிய தேதிக்கு ஒரு நாள் முன்னதாக தட்கல் டிக்கெட் காலை 10 மணி முதல் வழங்கப்பட்டது. நாடு முழுவதும் இன்று முதல் இது மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.ஏ.சி. வகுப்புகளுக்கு தனியாகவும், ஏ.சி. வசதி இல்லாத வகுப்புகளுக்கு தனியாகவும் தட்கல் முன்பதிவு நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.இதுவரை பயணம் செய்யக்கூடிய ரெயில் புறப்படும் நேரத்தில் இருந்து ஒரு நாள் முன்னதாக காலை 10 மணிக்கு தட்கல் புக்கிங் தொடங்கியது.இன்று முதல் ஏ.சி. வகுப்பு சரக்கு பயணம் செய்யக்கூடிய நாளுக்கு முந்தைய நாள் காலை 1 மணிக்கு தட்கல் புக்கிங் தொடங்குகிறது. ஏ.சி. வசதி அல்லாத வகுப்புகளுக்கு பயண தேதியின் முந்தைய நாள் காலை 11 மணிக்கு தொடங்கும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.பொதுமக்கள் அல்லாமல் ரெயில்வே ஏஜென்சிகளுக்கு தட்கல் டிக்கெட் வழங்கும் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுவரையில் ரெயில்வே டிக்கெட் ஏஜென்சிகள் ஆன்லைனில் காலை 8 மணி முதல் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும். இன்று முதல் காலை 8 மணி முதல் 8.30 மணி வரை ஏஜென்சிகளுக்கு தட்கல் டிக்கெட் வினியோகம் இல்லை.காலை 8.30 மணி முதல் 10 மணி வரையிலும், பின்னர் 10.30 மணி முதல் 11 மணி வரையிலும் தொடர்ந்து 11.30 மணி முதல் எப்போது வேண்டுமானாலும் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்யலாம்.டிக்கெட் கவுண்டர்களில் தட்கல் டிக்கெட் எடுக்க பல மணி நேரம் காத்திருந்தும் எடுக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்புகின்ற நிலை இருந்து வந்தது. அந்த நிலையை மாற்றுவதற்காக ஏஜென்சிகளுக்கு தட்கல் டிக்கெட் வழங்கும் நேரத்திலும் மாற்றம் செய்து இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.இது குறித்து ஐ.ஆர்.சி.டி.சி. அதிகாரி ஒருவர் கூறும்போது, ஏஜென்சிகளுக்கு தட்கல் டிக்கெட் நேரம் மாற்றி அமைக்கப்பட்டதன் மூலம் பொது மக்களுக்கு கவுண்டரிலும், ஆன்லைனிலும் எளிதாக டிக்கெட் இனி கிடைக்க வாய்ப்பு உள்ளது.மேலும் ஒரே நேரத்தில் ரெயில்வே வெப்–சைட்டை பொதுமக்களும், ஏஜென்சிகளும் நாடுவதால் டிக்கெட் எடுப்பதில் சிரமம் ஏற்படுகிறது. இனி வெப்–சைட் ஒர்க்லோடு குறையும். எனவே ஆன்லைனில் தட்கல் டிக்கெட் எடுக்க முயற்சிப்பவர்களுக்கு எளிதாக கிடைக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment