போட்டித் தேர்வுக்கான நூல்கள் பிரெய்லியில் வர வேண்டும்: பார்வையற்ற முதல் பெண் ஐ.எஃப்.எஸ். அதிகாரி வேண்டுகோள் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, June 15, 2015

போட்டித் தேர்வுக்கான நூல்கள் பிரெய்லியில் வர வேண்டும்: பார்வையற்ற முதல் பெண் ஐ.எஃப்.எஸ். அதிகாரி வேண்டுகோள்

போட்டித் தேர்வுக்கான அனைத்து நூல்களும் பிரெய்லியில் வர வேண்டும் என்று பார்வையற்ற முதல் பெண் வெளியுறவுத் துறை அதிகாரியான பினோ செபைன் கூறியுள்ளார்.

சென்னை வில்லிவாக் கத்தைச் சேர்ந்த பார்வையற்ற பெண்ணான பினோ செபைன் (25) ஐ.எஃப்.எஸ் (இந்திய வெளியுறவு சேவை) அதிகாரி யாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் இளங்கலை ஆங்கிலம் பயின்று, லயோலா கல்லூரியில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார்.

அறிவிப்பு

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி) நடத்திய தேர்வுகளை எழுதி கடந்த ஆண்டு வெற்றி பெற்றுள்ளார். அவர் ஐ.எஃப்.எஸ் அதிகாரியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக இரண்டு நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர் இந்தியாவில் 100 சதவீத பார்வையற்ற முதல் ஐ.எஃப்.எஸ் அதிகாரியாகி யுள்ளார். அவர் பயின்ற பயிற்சி மையங்களில் ஒன்றான கிங் மேக்கர்ஸ் அகாடெமி நேற்று அவரை கவுரவித்து விழா நடத்தியது.

அப்போது பினோ செபைன் கூறியதாவது:

மாற்றுத் திறனாளிகளாலும் இந்த தேர்வுகளை எளிதாக வெல்ல முடியும். அவர்களுக்காக மற்றவர்கள் அனுதாபப்படாமல், தேவையான உதவிகளை செய்ய வேண்டும். பார்வையற்றோர் பயன்படுத்தும் பிரெய்லி மொழியில் போட்டித் தேர்வு நூல்கள் வர வேண்டும். புத்தகங்கள் ஆடியோ வடிவில் நூலகங்களில் கிடைக்க வேண்டும். எனக்கு இந்த பணி கிடைத்ததற்கு காரணமாக இருந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் ஜெயலலிதா, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

முதல்வரை சந்திக்க விருப்பம்

நான் பயிற்சியில் சேர்வதற்கு முன் தமிழக முதல்வரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற விரும்புகிறேன்.

இவ்வாறு பினோ செபைன் கூறினார்.

No comments:

Post a Comment