தனியார் பள்ளிகளை கட்டுப்படுத்த புதிய சட்டம்: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Friday, June 19, 2015

தனியார் பள்ளிகளை கட்டுப்படுத்த புதிய சட்டம்: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

அனைத்து தனியார் பள்ளிகளையும் கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த புதிய சட்டம் கொண்டு வருவதற்கு ஓர் உயர்நிலைக் குழு அமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆர்.வேலு உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், “தமிழகத்தில் மெட்ரி குலேஷன் பள்ளிகள் முறையாக அனுமதி பெறாமல் நடத்தப்படு கின்றன. அப்பள்ளிகளுக்கான விதிமுறைகள் செல்லாது என்று அறிவிக்க வேண்டும். மேலும், 1-6-1976 வரை சென்னை மற்றும் மதுரை பல்கலைக்கழகங்களால் அங்கீகாரம் வழங்கப்பட்ட மெட்ரிகு லேஷன் பள்ளிகள் தவிர, இதர மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும்” என்று குறிப்பிட்டி ருந்தார்.
உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா ஆகியோர் கொண்ட அமர்வின் முன்பு இவ்வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் கூடுதல் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதன் விவரம் வருமாறு:
மெட்ரிகுலேஷன் பள்ளிகள், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள், நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகள் ஆகியவற்றை கட்டுப்படுத்துவதற் காக தனித்தனியே விதிமுறைகள் உள்ளன. இதர அனைத்துப் பள்ளி களையும் தமிழ்நாடு தனியார் பள்ளிகள் ஒழுங்காற்றுச் சட்டம் கட்டுப்படுத்துகிறது. மெட்ரி குலேஷன், ஆங்கிலோ இந்தியன், நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளுக்கான விதிமுறைகள் சட்டப்பூர்வமானது இல்லை.
இந்த நிலையில், அனைத்து தனியார் பள்ளிகளான
மெட்ரிகுலேஷன் பள்ளிகள், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள், ஓரியண்டல் பள்ளிகள், நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகள் ஆகியவற்றை கட்டுப் படுத்துவதற்காக 2010-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சமச்சீர் கல்விச் சட்டம் மற்றும் 2009-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட இலவச கட்டா யக் கல்வி உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் ஒருங்கிணைந்த புதிய சட்டம் கொண்டு வருவதற்காக ஓர் உயர்நிலைக் குழுவை அமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. எனவே, அடிப்படை ஆதாரமற்ற மனுதாரரின் மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அரசின் கூடுதல் பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment