பொது இடங்களில் துப்பினால்– குப்பை கொட்டினால் தண்டனை சட்டம் கொண்டு வர ஆலோசனை - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, June 29, 2015

பொது இடங்களில் துப்பினால்– குப்பை கொட்டினால் தண்டனை சட்டம் கொண்டு வர ஆலோசனை

பொது இடங்களில் குப்பை கொட்டினால், சிறுநீர் கழித்தால் அபராதம் விதிக்க மாநிலத்துக்கு, மாநிலம் மாறுபட்ட சட்ட விதிமுறைகள் உள்ளன. இந்த விதிகள் பெயரளவுக்குத் தான் உள்ளதே தவிர 100 சதவீதம் கடுமையான முறையில் கடைபிடிக்கப்படுவது இல்லை.பிரதமராக நரேந்திர மோடி பதவி ஏற்றதும் நாட்டை சுகாதாரமானதாக மாற்ற சில அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டார். அதில் குப்பை அகற்றும் போராட்டம் பிரதானமானது.எதிர்க்கட்சியினர் இதை கிண்டல் செய்தாலும் பல நகரங்களில் குப்பைகள் அகற்றப்படுவதில் வெற்றி காணப்பட்டுள்ளது. தற்போது இந்த திட்டத்துக்கு வலிமை சேர்க்கும் வகையில் வெளிநாடுகளில் உள்ளது போன்று ஒரு சட்டத்தை கொண்டுவர மத்திய சட்ட அமைச்சகம் ஆய்வு செய்து வருகிறது.பொது இடங்களில் துப்பினால், சிறுநீர் கழித்தால் அல்லது குப்பைகளை கொட்டினால் அபராத தொகையுடன் தண்டனை வழங்க சட்ட அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. நாடெங்கும் உள்ள நகர சபைக்குட்பட்ட பகுதிகளில் இருந்து பெரிய நகரங்கள் வரை இந்த சட்டத்தை அமல்படுத்துவது பற்றி ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.பொது இடங்களில் துப்புபவர்கள், சிறுநீர் கழிப்பவர்கள் மீது நகராட்சி நிர்வாகமே அபராதம் விதிக்க இந்த சட்ட விதிகளில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. உள்ளூர் தேவைக்கு ஏற்ப மாநில அரசுகள் இந்த சட்டத்தை அமல்படுத்த பரிந்துரை செய்யப்படும் என்று தெரிகிறது.

No comments:

Post a Comment