மருத்துவ படிப்பு கலந்தாய்வு இன்று துவக்கம் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Friday, June 19, 2015

மருத்துவ படிப்பு கலந்தாய்வு இன்று துவக்கம்

சென்னை, ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில், மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு இன்று துவங்குகிறது. இதற்காக, விசேஷ ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.முதல் நாளான இன்று, சிறப்பு பிரிவினர் கலந்தாய்வு;
நாளை முதல், பொது பிரிவினர் கலந்தாய்வு நடக்கிறது.கலந்தாய்வுக்காக, கூட்ட அரங்கிலும், வெளியேயும், 12 எல்.இ.டி., திரைகள்; தற்காலிக வங்கி வசதி, ஒரே நேரத்தில், ஐந்து மாணவர் அமர்ந்து, கல்லூரிகள் தேர்வு செய்யும் வகையில், ஐந்து கணினிகள் அமைக்கப்பட்டுள்ளன. பெற்றோர், மாணவர்கள் வெளியே அமர நிழற்கூடம்; அங்கு, நான்கு எல்.இ.டி., திரைகள்; குடிநீர், கழிப்பறை வசதி, சிற்றுண்டியகம் அமைக்கப்பட்டுள்ளன. வரும், 25ம் தேதி வரை, கலந்தாய்வு நடக்கிறது.மாணவர்கள் ஒரு மணி நேரம் முன்,
அரங்குக்குள் இருக்க வேண்டும்; மறுகூட்டல், மறுமதிப்பீடு மதிப்பெண் பெற்றவர்கள், அதற்கான சான்றை எடுத்து வர வேண்டும்.
கட்டணம் எவ்வளவு?
*அரசு மருத்துவக் கல்லூரிகளில், எம்.பி.பி.எஸ்., படிப்புக்கு, கல்விக் கட்டணம், 4,000 ரூபாயுடன், ஆண்டுக் கட்டணம், 13,600 ரூபாய்.
* பி.டி.எஸ்., படிப்புக்கான கல்விக் கட்டணம், 2,000 ரூபாயுடன், ஆண்டுக்கு, 11,600 ரூபாய் கட்டணம்.
* சுயநிதிக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு, எம்.பி.பி.எஸ்., இடத்திற்கு, 2.50 லட்சம் முதல், 3 லட்சம் ரூபாய் வரையும்; பி.டி.எஸ்., படிப்புக்கு, 1.30 லட்சம் ரூபாயும் கட்டணம்நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment