மருத்துவ துறையில் காலியாக உள்ள 1,202 சார்நிலை பணியிடங்களுக்கு நேரடி நியமனம்: - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, February 4, 2016

மருத்துவ துறையில் காலியாக உள்ள 1,202 சார்நிலை பணியிடங்களுக்கு நேரடி நியமனம்:

சுகாதாரத்துறை செயலாளர் தகவல்
தமிழக மருத்துவத் துறையில் காலியாக உள்ள 1,202 சார்நிலை பணியிடங்களுக்கு தகுதியானவர் கள் விண்ணப்பிக்கலாம் என்று சுகாதாரத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித் துள்ளார்.இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

மருத்துவப் பணியாளர் தேர் வாணையம் (எம்ஆர்பி) மூலம் தமிழக மருத்துவத் துறையில் சார்நிலைப் பணியில் காலியாக உள்ள 1,202 பணியிடங்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் நேரடியாக நியமிக்கப்பட உள்ளனர்.இஇஜி / இஎம்இ டெக்னீசியன் 12 இடங்கள், ஆடியோ மெட்ரீசியன் 17 இடங்கள், பிரோஸ்தெடிக் கிராப்ட்ஸ்மேன் 64 இடங்கள், ஆக்குபேஷனல் தெரபிஸ்ட் 18 இடங்களுக்கு வரும் 10-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண் டும்.பார்மசிஸ்ட் 333 இடங்கள், டார்க் ரூம் அசிஸ்டென்ட் 234இடங்கள், லேப் டெக்னீசியன் (கிரேடு-2) 524 இடங்களுக்கு வரும் 17-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இந்த காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த நபர்கள் www.mrb.tn.gov.in என்ற மருத்துவப் பணியாளர் இணையதளத்தில் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். கல்வி தகுதி உள்ளிட்ட அனைத்து விவரங்களும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இவ் வாறு ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment