10ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு சிறப்பு வழிகாட்டி கையேடு ஆகஸ்டில் வழங்க ஏற்பாடு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, June 21, 2016

10ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு சிறப்பு வழிகாட்டி கையேடு ஆகஸ்டில் வழங்க ஏற்பாடு

மெட்ரிக், தனியார் பள்ளிகள் சிலவற்றில் 9 மற்றும் 11ம் வகுப்புகளிலேயே 10, பிளஸ் 2 வகுப்பு பாடங்களை நடத்தப்படுகின்றன. அரசு பள்ளிகளில் இது சாத்தியமில்லை. இதனால் அரசு பள்ளிகள் தேர்ச்சி விகிதத்திலும், மதிப்பெண் அடிப்படையிலும் பின்தங்கி உள்ளன. எனவே, மாணவர்களின் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க, கடந்த காலங்களில் சிறப்பு வழிகாட்டி கையேடுகள் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் வழங்கப்பட்டன.

தேர்வுக்கு குறைந்த காலமே இருந்ததால் மாணவ, மாணவியர் இவற்றை முழுமையாக படிக்க முடியவில்லை. இதை தவிர்க்கும் வகையில், நடப்பு கல்வியாண்டில் இருந்து 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு ஆகஸ்ட் முதல் வாரத்தில் கையேடுகள் வழங்கப்பட உள்ளன.

இதற்காக கையேடுகளை அச்சிடும் பணிகள் தற்போது துவங்கி உள்ளன. சிறப்பு வழிகாட்டி கையேட்டை முன்கூட்டியே வழங்கும்பட்சத்தில், தேர்ச்சி விகிதம் கூட வாய்ப்பு இருப்பதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment