10ம் வகுப்பு துணைத்தேர்வு; ’தட்கல்’ விண்ணப்பம் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Saturday, June 11, 2016

10ம் வகுப்பு துணைத்தேர்வு; ’தட்கல்’ விண்ணப்பம்

பத்தாம் வகுப்பு சிறப்பு துணை பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க தவறிய மாணவர்கள் தட்கல் முறையில் விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுகள் இயக்கம் செய்தி வெளியிட்டுள்ளது.

அதன் விவரம்: நடைபெறவுள்ள ஜூன் / ஜூலை 2016 பத்தாம் வகுப்பு சிறப்பு துணை பொதுத்தேர்வெழுத இவ்வலுவலகத்தால் நிர்ணயிக்கப்பட்ட கடைசி தேதிக்குள் விண்ணப்பிக்க தவறி, தற்போது விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்களிடமிருயது சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் (தட்கல்) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பிக்க தகுதியானவர்கள்:

மார்ச் 2016, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வினை பள்ளி மாணாக்கராகவோ அல்லது தனித்தேர்வர்களாகவோ தேர்வெழுதியிருக்க வேண்டும்.
மார்ச் 2016, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத / வருகைப்புரியாத அனைத்துப் பாடங்களையும் உடனடித் தேர்வில் தேர்வெழுத விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க வேண்டிய நாட்கள்:

சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் தேர்வெழுத விரும்பும் தனித்தேர்வர்கள் தங்களது மாவட்டத்திற்குரிய முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் 13.06.2016  மற்றும் 14.06.2016  ஆகிய இரு நாட்களில் தங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்.

மார்ச் 2016 பத்தாம் வகுப்பு தேர்வெழுதியவர்கள் தமது தற்காலிக மதிப்பெண் சான்றிதழின் நகலினையும், தேர்வெழுதாதவர்கள் (Absentees) தமது தேர்வுக்கூட நுழைவுச்சீட்டையும் விண்ணப்பத்தினை பதிவு செய்யும் அலுவலரிடம் கண்டிப்பாக காண்பிக்க வேண்டும்.

தேர்வுக் கட்டண விவரம்:

தேர்வுக் கட்டணம் ரூ.125/-
சிறப்பு அனுமதிக் கட்டணம் ரூ.500/-
ஆன்-லைன் பதிவுக் கட்டணம் ரூ.50/-
மொத்தம் ரூ.675/-

மேற்காண் கட்டணத்தை விண்ணப்பம் பதிவு செய்யும் முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் பணமாக செலுத்த வேண்டும். தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுகளைப் பதிவிறக்கம் செய்ய வேண்டிய நாட்கள் குறித்து பின்னர் அறிவுக்கப்படும்.

No comments:

Post a Comment