2 ஆயிரம் இடங்களுக்கு 3008 விண்ணப்பங்கள் ,இடைநிலை ஆசிரியர் பட்டயப்படிப்பிற்கு! - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, June 22, 2016

2 ஆயிரம் இடங்களுக்கு 3008 விண்ணப்பங்கள் ,இடைநிலை ஆசிரியர் பட்டயப்படிப்பிற்கு!

தமிழகத்தில் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் (டயட்), அரசு மற்றும் அரசு உதவி பெறும் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள், தனியார் சுயநிதி ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் என மொத்தம் 403 ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் உள்ளன.

இவற்றில் 2 ஆண்டு கால இடைநிலை ஆசிரியர் பயிற்சி படிப்பு (தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பு) வழங்கப்படுகிறது. இதில், ஏறத்தாழ 12 ஆயிரம் இடங்கள் பொது கலந்தாய்வு மூலம் ஒற்றைச்சாளர முறையில் (சிங்கில் விண்டோ சிஸ்டம்) நிரப்பப்படுகின்றன.நடப்பு கல்வி ஆண்டில் (2016-17) இடைநிலை ஆசிரியர் பயிற்சி படிப்பில் சேர 3,008 பேர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களின் விண்ணப்பங்களை பரிசீலனை செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த வார இறுதிக்குள் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு, அதைத்தொடர்ந்து ஆன்லைனில் கலந்தாய்வு நடத்தப்படும் என்று மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன் தெரிவித்தார்.

No comments:

Post a Comment