சென்னை மாவட்டத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில், சேர விரும்பும் மாணவ - மாணவியர், ஜூன், 20 முதல், ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
சென்னை கலெக்டர் கோவிந்தராஜ், வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
சென்னை மாவட்டத்தில் இயங்கி வரும், வட சென்னை ஆர்.கே.நகர், கிண்டி, திருவான்மியூர் மற்றும் கிண்டி மகளிர் தொழிற்பயிற்சி நிறுவனங்களில், மாணவர் சேர்க்கை, ஜூன் 20ல் துவங்குகிறது. இது தொடர்பான விவரங்கள், skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் பார்த்து அறியலாம் அல்லது அருகில் உள்ள அரசு ஐ.டி.ஐ.,க்களை அணுகலாம்.
மாணவ - மாணவியர், மனுக்களை ஆன்லைனில் இலவசமாக பதிவேற்றம் செய்ய, அசல் கல்வி சான்றிதழ்களுடன், வட சென்னை அரசு ஐ.டி.ஐ.,யை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment