பி.இ., இரண்டாம் ஆண்டு நேரடி சேர்க்கைக்கு கடைசி நாளான நேற்று வரை 16 ஆயிரத்து 89 மாணவர்கள் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்துள்ளனர்.
டிப்ளமோ, பி.எஸ்சி., முடித்தவர்கள், பி.இ., பி.டெக்., இரண்டாம் ஆண்டில் நேரடியாக சேர்ந்து படிப்பதற்காக ஆன்லைனில் விண்ணப்பித்தல், கடந்த மே 24-ம் தேதி தொடங்கியது.
மாணவர்கள் இணையதளத்தில் விண்ணப்பத்தை பெற்று, தங்களது மதிப்பெண் மற்றும் சுய விபரங்களை பூர்த்தி செய்து, அந்த விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, அதனுடன் சேர்க்கைக்கான கட்டணம் ரூ.300-க்கு டி.டி., எடுத்து கலந்தாய்வு நடக்கும், காரைக்குடியில் உள்ள அழகப்ப செட்டியார் இன்ஜி., கல்லுாரிக்கு அனுப்ப அறிவுறுத்தப்பட்டது.
கடைசி நாளான நேற்று வரை 16,089 பேர் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்துள்ளனர். சிவில் பிரிவுக்கு 3,672, மெக்கானிக்கல் 6,435, எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் 5,695,கெமிக்கல் டெக்னாலஜி 149, டெக்ஸ்டைல் டெக்னாலஜி 86, லெதர் டெக்னாலஜி 8, பிரின்டிங் டெக்னாலஜி 13 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இதில், பி.எஸ்.சி., முடித்த 16 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
கடந்த ஆண்டு தமிழகம்: முழுவதும் உள்ள 533 இன்ஜி., கல்லுாரிகளிலிருந்து ஒரு லட்சத்து 11 ஆயிரம் இடங்கள் இரண்டாம் ஆண்டு நேரடி சேர்க்கைக்கு ஒப்படைக்கப்பட்டன. 16 ஆயிரத்து 637 பேர் மட்டுமே கலந்தாய்வில் பங்கேற்றனர்.
இந்த ஆண்டு 550-க்கும் மேற்பட்ட கல்லுாரிகள் உள்ளதால் கலந்தாய்வு இடங்கள் கடந்த ஆண்டை விட அதிகரிக்கும். கடந்த ஆண்டு 19 ஆயிரம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இந்த ஆண்டு 15 ஆயிரம் என்ற அளவிலேயே இருக்கும். ஆண்டுக்கு ஆண்டு, பி.இ., இரண்டாம் ஆண்டு நேரடி சேர்க்கையில் சேரும் டிப்ளமோ மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.
No comments:
Post a Comment