இந்தியாவில் மின்னணு கழிவுகள், ஆண்டுக்கு, 30 சதவீதம் அதிகரிப்பதாக, ஆய்வில் அதிர்ச்சிகர தகவல் வெளியாகி உள்ளது. மின்னணு கழிவுகள் குறித்து நடத்தப்பட்ட ஆய்வில் கூறப்பட்டு உள்ளதாவது:
130 டன்னாக அதிகரிக்கும்இந்தியாவில், தற்போது தேங்கிக் கிடக்கும் மின்னணு கழிவுகள், 18 லட்சம் மெட்ரிக் டன். இது ஆண்டுக்கு, 30 சதவீதம் அதிகரித்து, 2020ல், 52 லட்சம் மெட்ரிக் டன்னாக இருக்கும். சர்வதேச அளவில் மின்னணு கழிவுகள், இப்போது, 93.5
மெட்ரிக் டன்னாக உள்ளது. அடுத்த இரு ஆண்டுகளில், இது, 130 டன்னாக அதிகரிக்கும்.
இந்தியர்களிடம் பணப் புழக்கம் அதிகரித்துள்ளதால், மின்னணு சாதனங்களில்அதிகம் செலவழிக் கின்றனர். மின்னணு கழிவுகளில், கம்ப்யூட்டர் சாதனங்கள், 70 சதவீதம் உள்ளன. இதையடுத்து, தொலை தொடர்பு சாதனங்கள், 12 சதவீதமும், மின் சாதனங்கள் எட்டு சதவீதமும், மருத்துவ உபகரணங்கள் ஏழு சதவீதமாகவும் உள்ளன.
ஆனால், மின்னணு கழிவுகளில், 1.5 சதவீதம் மட்டுமே, மறுசுழற்சி முறையில் மீண்டும் பயன்படுத்தப்படுகிறது. மீதமுள்ள மின்னணு கழிவுகள், பழைய இரும்பு கடைகளில் தான்கு விக்கப்படுகின்றன. இதில், கம்ப்யூட்டர், 'டிவி,' மொபைல் போன்கள் ஆகியவற்றின் மின் கழிவுகள், அதிகளவில் ஆபத்தை ஏற்படுத்த கூடியவை. இவற்றில் ஈயம், பாதரசம், கேட்மியம் போன்றவை அதிகமாக இடம் பெற்றுள்ளன.
நோய் பாதிப்புமின்னணு கழிவுகளால், நிலத்தடி நீர்மட்டமும், மண் வளமும் பாதிக்கிறது; காற்றில் மாசு அதிகரிக்கிறது. இது, மனிதர்களின், நரம்பு செயல்பாடுகள், ரத்த ஓட்டம், சிறுநீரகம், மூளை ஆகியவற்றை பாதிக்கும் அபாயம் உள்ளது. மின்னணு கழிவுகளை கையாளும் தொழிலாளர்கள் பலர், பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இவ்வாறு ஆய்வில் கூறப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment