தமிழகத்தில் தகவல் தொழில்நுட்பம் வளர்ந்த போதிலும் கணினி அறிவியல் பி.எட் பட்டதாரிகள் 39019 பேர் பணியின்றி தவிக்கும் அவலம் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, June 2, 2016

தமிழகத்தில் தகவல் தொழில்நுட்பம் வளர்ந்த போதிலும் கணினி அறிவியல் பி.எட் பட்டதாரிகள் 39019 பேர் பணியின்றி தவிக்கும் அவலம்

தமிழகத்தில் தகவல் தொழில்நுட்பம் வளர்ந்த போதிலும் கணினி அறிவியல் பி.எட் பட்டதாரிகள் 39019 பேர் பணியின்றி தவிக்கும் அவலம்
ஆர்எம்எஸ்ஏ திட்டத்தில் கணினி பாடம் கற்பிக்க அதிகாரிகள் மெத்தனத்தால் பணி வாய்ப்பு கிட்டவில்லை .

ஆர்எம்எஸ்ஏ திட்டத்தில் தகவல் தொழில் நுட்ப பாடத்தை பயிற்றுவிக்க மத்திய அரசு முன் வந்தாலும் தமிழக அரசு அதிகாரிகள்  மெத்தனத்தால் பணி வாய்ப்பு புறக்கணிக்கப்படுகிறது என்று கணினி பி.எட் பட்டதா ரி கள் குற்றச்சாட் டியுள்னர்.

தமிழத்தில் 1992ம் ஆண்டிலிருந்து கணினி பட்டதாரிகள் ஆண்கள் 9,579 பேர், பெண்கள் 29,440 பேர் உட்பட 39,019 பேர் பி.எட் கணினி அறிவியல் பாடத்தை அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் படித்து விட்டு வேலைக்காக காத்திருக்கின்றனர். இதுவரை அவர்களுக்கு வேலை வழங்கவில்லை. ஆசிரியர்தகுதி தேர்வையும் எழுத அனுமதிக்கவில்லை.

2011ம் ஆண்டு சமச்சீர் பாடத்திட்டம் கொண்டு வந்தபோது அதில் கணினி பாடத்திட்டமும் சேர்க்கப்பட்டிருந்தது. அதற்காக 6 முதல் 10 வகுப்புக்கான பாடப்புத்தகங்களும் அச்சடிக்கப்பட்டு வெளியிடப்பட்டன. ஆனால் அந்த பாடத்திட்டத்தை முழுவதும் ரத்து செய்து விட்டு புத்தகத்தை வழங்க வில்லை.
மத்திய அரசின் கீழ் செயல்படும் எஸ் எஸ் ஏ (சர்வ சிக்‌ஷ அபியான்), ஆர் எம் எஸ்ஏ (ராஷ்ட் ரிய மத்திய சிஷ்ய அபியான்) திட்டத்தில் ஐசிடி எனப்ப டும் தகவல் தொழில் நுட்பபாடத் திட்டத்தை நடத்துவதற்கு ஆசிரியர்களை நியமிக்க மத்திய அரசு ஆண்டு தோறும் திட்டவரைவுளை கேட்டு பெற்று வருகிறது. அதை நடைமுறைக்கு கொண்டு வருவதில் தொடர் நடவடிக்கை எடுக்காமலும், தமிழக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று மத்திய அரசை வலியுறுத்த செய்வதிலும் தமிழக பள்ளி கல்வி அதிகாரிகள் ஆர்வம் செலுத்துவதில்லை. இதனால் கணினி ஆசிரியர்களுக்கு கிடைக்க வேண்டிய குறைந்தபட்ச பணிவாய்ப்பும் பறிபோவதாக தகவல் வெளிவருகின்றன.
அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில் தனியார் பள்ளிகள் கணினி பயிற்சியளிக்கிறோம் என்பதை தங்களது சிறப்பம்சமாக எடுத்துக் கூறி மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்துகிறது. இதற்கும் ஆர் எம் எஸ் ஏ திட்டத்தில் ஐசிடி பாடத்திட்டத்தை கொண்டு வருவதில் நிலவும் காலதாமதத்துக்கும் தொடர்புள்ளதோ என்ற சந்தேகத்தை கணினி பிஎட் பட்டதாரிகள் எழுப்புகின்றனர்.
அரசு பள்ளிகளில் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை கணினி அறிவியல் பாடத்தை தமிழக அரசு நடைமுறைப்படுத்த வேண்டும். புதிதாக தரம் உயர்த்தப்பட்ட 800 மேல்நிலைப்பள்ளிகளில் புறக்கணிக்கப்பட்டுள்ள கணினி அறிவியல் பாடத்தை கொண்டு வந்து கணினி ஆசிரியர்களை நிய மிக்க வேண்டும். அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள கணினி ஆசிரியர் பணியிடங்களை மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப நியமிக்க வேண்டும். பள்ளிக்கு ஒரு கணினி ஆசிரியரை நியமிக்க வேண்டும். தொடக்க, நடுநிலை, உயர் நிலை, மேல்நிலைப்பள்ளிகளுக்கு குறைந்தது ஒரு கணினி ஆசிரியரையாவது நியமனம் செய்ய வேண்டும் என்பது கணினி பட்டதாரிகளின் நீண்ட நாள் கோரிக்கையாகும்.
கடந்த 5 ஆண்டு காலத்தில் தகுதித் தேர்வு எழுதினால் தான் ஆசிரியர் பணி என்ற நிலையை தற்போதைய ஆட்சியாளர்களின் கொள்கையென அறிவித்து விட்ட நிலையில் பிஎட் கணினி பட் டதாரிகள் விஷயத்தில் தொடர்ந்து மவுனம் காத்து வருவதை தமிழக அரசு வழக்கமாக கொண்டுள்ளது. தற்போது மீண்டும் ஜெயலலிதாவே முதல்வராகி பழைய அதிகாரிகளே பொறுப்பேற்றுள்ளதால் தமிழக அரசு, பிஎட் கணினி பட்டதாரிகள் குறித்த தெளிவான நிலையை விளக்க வேண்டும். உடனடியாக வேலை வாய்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிடவேண்டும் என பது தான் பி.எட் பட் டதாரிகளின் கோரிக்கையாக உள்ளது.
இது குறித்து தமிழ்நாடு கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரிகள் சங்க மாநில பொது செயலாளர் குமரேசன், மாநில துணைத்தலைவர் கார்த்திக், செய்தி தொடர்பாளர் வேல்முருகன், நிர்வாகிகள் ரங்கநாயகி, திலகவதி ஆகியோர் கூறியதாவது: நாங்கள் என்ன தவறு செய்தோம் என்றே தெரியவில்லை.  தமி ழ கத் தில் கணினி பட் ட தா ரி களை கைதூக் கி விட யாரு மில் லாத நிலை உள் ளது. கணினி பட் ட தா ரி க ளுக்கு TET, TRB போன்ற ஆசி ரி யர் தகு தித் தேர்வே நடத் த வில்லை. அது போல் ஏஇஓ, டிஇஓ, தேர் வுக்கு அடிப் படை கல்வி பி.எட். ஆனால் கணினி அறி வி ய லில் பி.எட் பட் டம் பெற்ற எங் க ளுக்கு அதி லும் வாய்ப்பு வழங் க வில்லை.
கடந்த சில ஆண் டு க ளுக்கு முன் உடற் கல்வி, ஓவி யம், தையல், கணினி ஆகிய தொழிற் கல்வி பாடங் க ளுக் கான சிறப் பா சி ரி யர் நிய ம னத் தி லும் கூட பி.எட் படித்த கணினி பட் ட தா ரி கள் புறக் க ணிக் கப் பட் ட னர். தமி ழ கத் தில் உள்ள அரசு மற் றும் அரசு உத வி பெ றும் பள் ளி யில் பயி லும் கிரா மப் புற ஏழை, எளிய, மாண வர் க ளின் நல னுக் கா க வும் அவர் க ளின் கல் வித் த ரத்தை உயர்த் தும் நோக் கி லும் அரசு பள்ளி மற் றும் மாண வர் க ளின் எதிர் கா லத்தை கருத் தில் கொண் டும் ஒன் றாம் வகுப் பி லி! ருந்து 10ம் வகுப்பு வரை கணினி அறி வி யல் பாடத்தை கட் டா ய மாக் கி னால் எங் க ளுக்கு பணி வாய்ப்பு உரு வா கும்.
மெட் ரிக், சிபி எஸ்இ பாடத் திட் டத் தில் ஆரம்ப கல் வி யி லேயே கணினி அறி வி யல் பாடம் உள் ளது. தமி ழ கத்தை தவிர மற்ற மாநில அரசு பள் ளி க ளில் கணினி அறி வி யல் கல்வி கட் டாய பாட மாக உள் ளது.
கேர ளா வில் பத் தாம் வகுப் பில் தேர்ச்சி பெற கணி தம், அறி வி யல் போன்று கணினி அறி வி யல் பாடத் தி லும் தேர்ச்சி பெற வேண் டும். தமி ழ கம் தக வல் தொழில் நுட் பத் தில் பல புரட் சி களை செய்ய வேண் டும் என்ற நோக் கத்தை வெளிப் ப டுத் தி னா லும் எதிர் கா லத் தில் கணினி அறி வோடு கூடிய மாண வர் களை உரு வாக் கு வ தற்கு உரிய கவ னத்தை அரசு செலுத் த வில்லை.
உல கமே கணினி மய மாக மாறி வ ரும் காலக் கட் டத் தில் கணி னி யின் முக் கி யத் து வத்தை உணர்ந்து அரசு பள் ளி யில் மாண வர் கள் அதி கம் கணினி அறி வி யல் பாடத்தை தேர்வு செய் கின் ற னர். ஆனால் பல பள் ளி க ளில் கணினி ஆசி ரி யர் இல் லா ம லும் அல் லது மாண வர் க ளின் எண் ணிக் கைக்கு ஏற்ப ஆசி ரி யர் கள் இல் லா த தால் மாண வர் கள் கணினி பாடத்தை படிக்க முடி யா மல் திண் டா டு கின் ற னர். அது போல் தரம் உயர்த் தப் பட்ட அரசு மேல் நி லைப் பள் ளி க ளி லும் கணினி பாடத்தை கொண்டு வர வில்லை. எனவே தமி ழக முதல் வர் ஜெய ல லிதா, இந்த முறை யா வது உரிய கவ னத்தை செலுத்தி கணினி பட் ட தா ரி க ளுக்கு வேலை வழங்க நட வ டிக்கை எடுக்க வேண் டும் என் ற னர்.
-நன்றி தினகரன்

வெ.குமரேசன்,
மாநில பொதுச்செயலாளர்,
9626545446.
தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்.

No comments:

Post a Comment