தமிழக கல்வித் துறையில் முதன்மை கல்வி அலுவலர்கள் (சி.இ.ஓ.,க்கள்) மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் (டி.இ.ஓ.,க்கள்) பணியிடங்கள் 50 சதவீதம் வரை காலியாக இருப்பதால், கல்வித்தரம் மற்றும் அரசு நலத்திட்டங்கள் வழங்கும் பணிகள் பாதிப்பு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, June 15, 2016

தமிழக கல்வித் துறையில் முதன்மை கல்வி அலுவலர்கள் (சி.இ.ஓ.,க்கள்) மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் (டி.இ.ஓ.,க்கள்) பணியிடங்கள் 50 சதவீதம் வரை காலியாக இருப்பதால், கல்வித்தரம் மற்றும் அரசு நலத்திட்டங்கள் வழங்கும் பணிகள் பாதிப்பு

தமிழக கல்வித் துறையில் முதன்மை கல்வி அலுவலர்கள் (சி.இ.ஓ.,க்கள்) மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் (டி.இ.ஓ.,க்கள்) பணியிடங்கள் 50 சதவீதம் வரை காலியாக இருப்பதால், கல்வித்தரம் மற்றும் அரசு நலத்திட்டங்கள் வழங்கும் பணிகள் பாதித்துள்ளன.

மாநிலத்தில் 67 பணியிடங்களில்,மதுரை, நெல்லை, துாத்துக்குடி,கன்னியாகுமரி (எஸ்.எஸ்.ஏ.,)உட்பட 30 சி.இ.ஓ.,க்கள் மற்றும் கூடுதல் சி.இ.ஓ.,க்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதேபோல் 128 டி.இ.ஒ.,பணியிடங்களில் நாகபட்டினம்,தேனி (டி.இ.இ.ஓ.,க்கள்),மயிலாடுதுறை, சேலம், கரூர்,செங்கல்பட்டு, செய்யாறு (டி.இ.ஓ.,க்கள்) காஞ்சிபுரம் (ஐ.எம்.எஸ்.,) உட்பட 60பணியிடங்கள் வரை காலியாக உள்ளன. 

சட்டசபை தேர்தலால் பொதுத் தேர்வை முன்னிட்டு காலிப் பணியிடங்களை நிரப்ப கல்வி அதிகாரிகள் ஆர்வம் காட்டவில்லை. இதனால் மாணவர்களின் கல்வி தரம் ஆய்வு,நிர்வாகப் பணி கண்காணிப்பு,அரசின் 14 வகை நலத் திட்டங்கள் வழங்கும் பணிகள் பாதித்துள்ளன.

இதுகுறித்து ஆசிரியர் சங்க நிர்வாகி ஒருவர் கூறியதாவது: 

சி.இ.ஓ., டி.இ.ஓ.,க்கள் பணியிடம் காலியானால் அதை நிரப்ப உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மூச்சு முட்டும் வகையில் நலத் திட்டங்களை வழங்க அரசு வற்புறுத்துகிறது. 

கல்விப் பணி பாதிக்கிறது. பொதுத் தேர்வில் தேர்ச்சி குறைந்தாலும் ஆசிரியர்கள் பதில் அளிக்க வேண்டியுள்ளது. அதிகாரிகள் இதில் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment